/tamil-ie/media/media_files/uploads/2022/02/cream-759-1.jpg)
Homemade moisturize recipe
பருவகால மாற்றங்கள் காரணமாக, நம்மில் பலருக்கு சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது. அந்த நேரத்தில், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களில் செலவழிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் சொந்த மாய்ஸ்சரைசரை’ வீட்டிலேயே சில அடிப்படை, எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு எப்போதும் செய்யலாம்.
டயட்டீஷியன் லாவ்லீன் கவுர் இன்ஸ்டாகிராமில்’ நீங்களே வீட்டில் இயற்கையான முறையில் செய்யக்கூடிய மாய்ஸ்சரைசர் ரெசிபியை பகிர்ந்து கொண்டார்.
வறண்ட, அரிக்கும் சருமத்துக்கு, நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன் என்று லாவ்லீன் கூறினார்.
மிருதுவான, மென்மையான சருமத்திற்கு மூன்று அடிப்படை பொருட்கள் மட்டுமே தேவை.
தேவையான பொருட்கள்
50 மில்லி - ரோஸ் வாட்டர்
1 டீஸ்பூன் - கிளிசரின்
1 எண் - வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
செய்முறை
பொருட்களை ஒன்றாக கலக்கவும். ஷேக் செய்து பிறகு முகத்தில் அப்ளை செய்யவும்.
இந்த எளிதான தீர்வு, உங்கள் சருமத்துக்கு அதிசயங்களைச் செய்யும் என்று கவுர் கூறினார்.
உங்களுக்கும் வறண்ட, அரிக்கும் தோலா? மறக்காமல் இந்த மாய்ஸ்சரைசரை முயற்சி செய்யுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.