Skin care Tips: வீட்டுல இருக்கும்போது இந்தச் சின்ன விஷயங்களை மறந்துடாதீங்க!

Skin care Tamil News: உதடுகள் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், மேலும் மிக தீவிரமான கவனிப்பும் தேவைப்படும் பகுதியாகும்.

Get Glow Face, Beauty Tips, Cabbage Water, முகம் பொலிவு பெற, அழகு குறிப்புகள், முட்டைகோஸ் தண்ணீர், தயிர் ஆலிவ் எண்ணெய், சரும பாதுகாப்பு,Yogurt and Olive Oil, Skin Care
Skin care Tips, Skin care foods, Skin care treatment, Skin care home remedies, ஸ்கின் கேர், ஸ்கின் கேர் டிப்ஸ், தோல் பராமரிப்பு

Skin care Tips: நம்மில் பெரும்பாலோர் தற்போது வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், நமது தோல் பராமரிப்பு திட்டங்கள் கணிசமாக மாறிவிட்டன. நம்மில் பெரும்பாலோர் ஒப்பனையை தவிர்த்து, நம் சருமத்திற்கு ஒரு இடைவெளி கொடுக்கும் அதே வேளையில், இந்த வாய்ப்பை நமது சுய பராமரிப்புக்கு பயன்படுத்த வேண்டும், சில அடிப்படைகளை மறந்துவிடக் கூடாது; எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை சாத்தியமான சிறிய வழிகளில் கூட கெடுத்துவிடக் கூடாது. நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள Flipkart நிபுணர்களிடமிருந்து சில குறிப்புகள் இங்கே.


Skin care: புற ஊதா கதிர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

ஒருவர் வெளியே செல்லும் போது மட்டுமே சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு பழங்கதை. நீங்கள் வீட்டில் தங்கியிருந்தாலும் அல்லது உடற்பயிற்சிக்காக ஒரு நாளைக்கு ஒரு முறை வெளியில் சென்றாலும், முழு ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியம். ஏனென்றால் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் நல்ல திரைச்சீலைகள் கூட புற ஊதா கதிர்களை உள்ளே அனுமதிக்கக்கூடும்.

Skin care: ஒரு வழக்கமான தோல், சுத்திகரிப்பு அதிசயங்களை செய்ய கூடும்

தோல் பராமரிப்பு என்று வரும்போது, ஊரடங்குக்கு மத்தியில், நம்மில் பலர் நம் சருமம் நிறைய வறண்டு இருப்பதைக் காணலாம். மற்றும் மந்தமான, சோர்வான தோலுடன் எதிர்பாராத பிரேக்அவுட்களையும் காண்கிறோம். இது, முக்கியமாக சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நிலையான மன அழுத்தம், பதட்டம் மற்றும் சருமத்தை பாதிக்கும் புதிய பழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
இதை எதிர்கொள்ள, கிரீம், எண்ணெய், micellar water – உங்கள் தோல் வகைக்கு ஏற்ற ஒரு cleanser ஐ பயன்படுத்துவதை உறுதிசெய்து, ஒவ்வொரு மாலையும் உங்கள் சுத்திகரிப்பு (cleansing) சடங்கை முடிக்கவும். பகலில் உங்கள் சருமத்தில் குவிந்துள்ள அழுக்கை அகற்றவும், உங்கள் சருமம் இரவில் உகந்ததாக மீண்டும் உருவாக்கப்படுவதை உறுதி செய்யவும் இது இன்றியமையாததால் இதை உங்கள் வழக்கமான ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளுங்கள். அதனுடன், உங்களை உள்ளே hydrated ஆக வைத்திருங்கள், அது அதிசயங்களைச் செய்து, உங்கள் சருமத்திற்கு பளபளப்பைக் திரும்பவும் கொடுக்கும்.

Skin care: வீட்டிலேயே இருங்கள், ஈரப்பதத்துடன் இருங்கள்

வைரஸை துரத்துவதற்கு தவறாமல் நமது கைகளை கழுவவேண்டியது முக்கியமானதாக இருந்தாலும் கழுவுவதும், சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வதும் நமது சருமத்தை உலர்வானதாக மாற்றிவிடும். எனவே, உங்கள் கைகளை தவறாமல் ஈரப்பதமாக்குவது மிகவும் முக்கியம்.

Skin care: உதடு பராமரிப்பை புறக்கணிக்காதீர்கள்

கடைசியாக, புறக்கணிக்கக் கூடாத ஒரு விஷயம் உதடு பராமரிப்பு. லிப் பாம் என்பது ஒரு அத்தியாவசிய அழகு பொருள் மட்டுமல்ல, ஆரோக்கியமான சருமத்திற்கும் மிகவும் அவசியமானது. உதடுகள் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், மேலும் மிக தீவிரமான கவனிப்பும் தேவைப்படும் பகுதியாகும். எனவே, அடுத்த முறை உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளும்போது, உங்கள் உதடுகளையும் hydrated வைத்திருக்க மறக்காதீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Skin care tips skin care foods skin care tamil news

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express