பளபளக்கும் சருமம்… வீட்டிலேயே ‘பாடி பட்டர்’ செய்வது எப்படி?

Winter skincare tips – குளித்த உடனேயே உங்கள் சருமத்தை பாடி பட்டர் கொண்டு மசாஜ் செய்யலாம் மற்றும் இரவில் தூங்குவதற்கு முன் அப்ளை செய்யலாம்.

Body Butter Home made recipe winter skincare tips in tamil
Body Butter Home made recipe winter skincare tips

skin care Tips Tamil : குளிர்காலத்தில் சருமம், வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமாகச் செயல்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு, ஈரப்பதத்தின் வீழ்ச்சி சருமத்தை வறண்டு போகச் செய்கிறது. சிலருக்கு சில சரும பராமரிப்பு நடைமுறைகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன. மேலும் சிலருக்குக் குளிர்ந்த, கடுமையான வானிலையில் சருமத்தைப் பாதுகாக்க வலுவான வேறொன்று தேவை.

குளிர்காலத்தில், மிகவும் வறண்ட, சீரற்ற, அரிப்பு மற்றும் சிவப்பு நிறமாகச் சருமம் மாறும் நபர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் பாடி பட்டர் (Body Butter) உங்கள் கைகளில் இருப்பது அவசியம். மாய்ஸ்ச்சரைசர் அல்லது வேறு எந்த உடல் லோஷனுடன் ஒப்பிடும்போது, பாடி பட்டர் சீரானதாக இருக்கும். அதிலும் வீட்டிலேயே தயாரிக்கும் வெண்ணெய் என்றால் நீங்கள் விரும்பும் பல இயற்கைப் பொருட்களுடன் அதை பேக் செய்யலாம். தேங்காய், ஷியா வெண்ணெய், பாதாம், கற்றாழை என உங்களுக்கு விருப்பமான எந்த அத்தியாவசிய எண்ணெய்யும் இதில் அடங்கும். கூடுதலாக, சந்தை தயாரிப்புகளைப் போலல்லாமல், இவை எந்தவொரு சரும வகைக்கும் பயன்படுத்தப்படலாம். அதுமட்டுமின்றி  இதற்கு எந்தவித பேட்ச் சோதனையும் செய்யத் தேவையில்லை.

சருமத்தில் பாடி பட்டர் அப்லை செய்வதன் மூலம், ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இதனால், சருமம் எல்லா நேரங்களிலும் நீரேற்றமாக இருக்கும். இந்த காரணத்தினாலேயே வழக்கமாக பாடி பட்டர் பயன்படுத்துபவர்களுக்குச் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

பாடி பட்டரை எப்போது அப்லை செய்யவேண்டும்?

நீங்கள் அப்லை செய்யக்கூடிய நாளில் நிலையான நேரம் இல்லை என்றாலும், குளித்த உடனேயே உங்கள் சருமத்தை பாடி பட்டர் கொண்டு மசாஜ் செய்யலாம் மற்றும் இரவில் தூங்குவதற்கு முன் அப்லை செய்யலாம்.

வீட்டிலேயே பாடி பட்டர் செய்ய தேவையான பொருள்கள்:

– ஷியா வெண்ணெய் – ஒரு கப்
– தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
– பாதாம் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
– லாவெண்டர் எசென்ஷியல் எண்ணெய் – சில சொட்டுகள் (நீங்கள் விரும்பும் வேறு எந்த எசென்ஷியல் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்)

செய்முறை

* முதலில் குறைந்த வெப்பத்தில் ஒரு பாத்திரத்தில் ஷியா வெண்ணெய்யை உருக்கவும்.
* அடுத்து, சூடான வெண்ணெய்யில் தேங்காய் மற்றும் பாதாம் எண்ணெய்யைச் சேர்க்கவும். அவற்றை நன்கு கலந்துவிடவும்.
* அடுப்பிலிருந்து வெளியே எடுத்து அந்த கலவையைக் குளிர்விக்கவும்.
* அடுத்து, நீங்கள் லாவெண்டர் அல்லது உங்களுக்கு விருப்பமான எசென்ஷியல் எண்ணெய்யையும் சேர்த்துக்கொள்ளவும்.
* புதிய மற்றும் சுத்தமான பாத்திரத்தில் சேமித்து, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். தேவையான போதெல்லாம் பயன்படுத்தவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Skin care tips tamil body butter home made recipe winter skincare tips in tamil

Next Story
புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!chutney onion tomato chutney chutney recipes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com