சுத்தமான மற்றும் மென்மையான ஃபினிஷிங்க்கு, நம்மில் பலர் உடல் முடியை வேக்ஸிங் அல்லது ஷேவிங் செய்த பிறகு நம் தோலில் புடைப்புகள் மற்றும் அரிப்புகளை அனுபவிக்கிறோம்.
இவை இன்கிரோன் ஹேர் (ingrown hair) என்று அழைக்கப்படுகின்றன – முடி தோலுக்கு வெளியே வளராமல் தோலுக்குள் மீண்டும் வளரும்.
WebMD படி, இறந்த சருமம்’ ஃபாலிக்கிள்ஸ்-ஐ அடைத்துவிடும், இது முடியை மேலேயும், வெளியேயும் விட’ தோலின் கீழ் பக்கவாட்டாக வளரச் செய்கிறது. இன்கிரோன் ஹேர்’ அரிப்பு மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும், மேலும் தோலில் ஒட்டுமொத்தமாக பள்ளமான தோற்றத்தைக் கொடுக்கும்.
“ஒரு முடி, அதன் ஃபாலிக்கிள்ஸ்-க்கு வெளியே வளருவதற்குப் பதிலாக உங்கள் தோலில் மீண்டும் நுழையும் போது இது நிகழ்கிறது. சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது வலி, அரிப்பு மற்றும் வடுவை விட்டுவிடும், ”என்று தோல் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா கூறினார், அவற்றைத் தடுக்கவும் திறம்பட அகற்றவும் சில எளிய குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

“நீங்கள் ஹாட் கம்பிரஸ் (hot compress) பயன்படுத்தலாம் அல்லது தோல் மருத்துவரிடம் சென்று அந்த வளர்ந்த முடிகளை அகற்றலாம்” என்று அவர் இன்ஸ்டாகிராமில் கூறினார்.
குப்தாவின் கூற்றுப்படி, இன்கிரோன் முடியை தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் சிறந்த வழி’ லேசர் ஹேர் ரிடக்ஷன் (laser hair reduction) ஆகும்.
முன்னதாக, நீங்கள் இன்கிரோன் முடியை’ கையாளும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை நிபுணர் பட்டியலிட்டுள்ளார்.
*உங்கள் சருமத்தை வாரத்திற்கு இரண்டு முறை ஃபிசிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட் மூலம் எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்.
*வாரத்திற்கு ஒருமுறை கெமிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட் மூலம் எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்.
*எப்பொழுதும் எக்ஸ்ஃபோலியேட் செய்த பிறகு மாய்ஸ்சரைஸ் பயன்படுத்தவும். நீங்கள் ஷேவ் செய்தாலோ அல்லது வேக்ஸிங் செய்தாலோ, முதலில் வெதுவெதுப்பான நீரில்’ தோலை ஈரப்படுத்தவும். முடி வளரும் திசையில் அகற்றவும், எதிர்மாறாக அல்ல.
*தற்போது ஷேவ் அல்லது வேக்ஸிங் செய்தால், லேசர் ஹேர் ரிமூவல்-க்கு மாறவும்.
* இன்கிரோன் ஹேர் அல்லது புடைப்புகளை எடுக்க வேண்டாம். பாதுகாப்பாக அகற்றுவதற்கு மருத்துவரைப் பார்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“