வைட்டமின் ஈ, வீக்கத்தைக் குறைப்பதற்கும், தோல் சேதத்தைத் தடுப்பதற்கும், சருமத்தின் இயற்கையான ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அவசியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த நன்மைகளுடன், வைட்டமின் ஈ ஹைப்பர் பிக்மென்டேஷனைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது மற்றும் சருமத்திற்கு இயற்கையான ஊட்டமளிக்கும் முகவராக உள்ளது.
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் வைட்டமின் ஈ எண்ணெயின் வளமான ஆதாரங்களாகும். முகம் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களைப் பயன்படுத்துவதற்கான சில எளிதான மற்றும் நன்கு அறியப்பட்ட வழிகள் இங்கே உள்ளன.
படி 1: எண்ணெயை ஊற்றுவதற்கு காப்ஸ்யூலின் பக்கங்களை வெட்டுங்கள்
படி 2: வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களில் இருந்து எண்ணெயை உங்கள் கைகளில் ஊற்றவும். எண்ணெயை ஊற்றுவதற்கு முன் கைகள் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
படி 3: பாதிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு முறை உள்ளது, வைட்டமின் ஈ காப்ஸ்யூல், உங்கள் தினசரி சமையலறை பொருட்களை கொண்டு, நீங்களே சொந்தமாக வீட்டில் ஃபேஸ் மாஸ்க் உருவாக்கலாம்.
அதற்கு முன், வைட்டமின் ஈ உங்கள் சருமத்திற்கு என்ன செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஹைப்பர் பிக்மென்டேஷன்
கருமையான திட்டுகள், துளைகள் உங்கள் முகத்தில் நீடித்த கரும்புள்ளிகளை விட்டுவிடும். இந்த நிலை மெலனின் என்று அழைக்கப்படுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பிற காரணிகளால் இது ஏற்படுகிறது. வைட்டமின் சி உடன் இணைந்து, வைட்டமின் ஈ ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
முதுமைக்கு பை சொல்லுங்கள்
வைட்டமின் ஈ அதிக அளவு ஆக்ஸிஜனேற்றத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இரத்த ஓட்டத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. வைட்டமின் ஈ பயன்படுத்திய பிறகு உங்கள் முகத்தின் தோலில் ஒரு வித்தியாசத்தை உணரலாம்.
மென்மையான உதடுகளுக்கு
வைட்டமின் ஈ எண்ணெய்’ தோல் மீளுருவாக்கம் மற்றும் செல்களை மீண்டும் உருவாக்குவதற்கு அறியப்படுகிறது. இதேபோல், வைட்டமின் ஈ எண்ணெய் உதடுகளின் தோலை மீட்டெடுப்பதற்கும், மீளுருவாக்கம் செய்வதற்கும் நன்கு அறியப்பட்டதாகும்.
வீட்டிலேயே வைட்டமின் ஈ மாஸ்க் தயாரிப்பதற்கான வழிமுறைகள் இங்கே.
வைட்டமின் ஈ மாஸ்க் தயாரிப்பது எப்படி?
2 டீஸ்பூன் வைட்டமின் ஈ ஆயில்
2 டீஸ்பூன் தயிர்
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
ரோஸ் வாட்டர்
வைட்டமின் ஈ ஆயில், தயிர், எலுமிச்சை சாறு மூன்றையும் நன்கு கலந்து, முகத்தில் மசாஜ் செய்து, ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு, குளிர்ந்த நீரில் மீண்டும் சுத்தம் செய்து மெதுவாக உலர்த்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“