சரும பராமரிப்பு எச்சரிக்கை: நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து விஷயங்கள்!
Skin cleansing mistakes to avoid Tamil News ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை உறுதிப்படுத்த நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து சுத்தப்படுத்தும் தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார்.
Skin cleansing mistakes to avoid Tamil News : உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உங்கள் முகத்தைத் தவறாமல் கழுவுவது மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள வழி. இருப்பினும், நீங்கள் அதைத் தவறான வழியில் செய்தால் அது பயனுள்ளதாக இருக்காது. தவறான சரும சுத்திகரிப்பு பழக்கம், முகப்பரு மற்றும் தோல் சேதத்தை விளைவிக்கும். உங்கள் சருமத்திற்கு நல்லதை விடத் தீங்கு விளைவிக்கும்.
Advertisment
எனவே, நீங்கள் அறியாமல் செய்யும் சில சுத்தப்படுத்தும் தவறுகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சரும மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை உறுதிப்படுத்த நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து சுத்தப்படுத்தும் தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார்.
"உங்கள் முகத்தைக் கழுவுவது எளிதானது என்று தோன்றலாம். ஆனால் சுத்தமான, தெளிவான சருமத்தைப் பெறுவதற்கு உண்மையில் அதற்கென்று ஒரு அமைப்பு உள்ளது. உங்கள் சருமத்தை சுத்தம் செய்யும் போது நீங்கள் செய்யக்கூடிய ஐந்து தவறுகள் இங்கே உள்ளன” என்று அவர் கூறினார்.
இந்த ஐந்து சுத்திகரிப்பு தவறுகளைத் தவிர்க்கவும்:
வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தாமல் இருப்பது.
இரட்டை சுத்திகரிப்பு (double-cleansing) செய்யாமல் இருப்பது.
30 வினாடிக்குள் கழுவுவது.
உங்கள் தலைமுடி, காதுகள் மற்றும் கழுத்தை சுத்தம் செய்யாமல் இருப்பது.
உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஃபேஸ் வாஷை தேர்வு செய்யாமல் இருப்பது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil