Skin problems winters tips haircare Tamil News : குளிர்காலங்களில், கோடை மாதங்களில் செயல்படுவதை விட சருமம் வித்தியாசமாக செயல்படுகிறது. ஈரப்பதம் குறைவதால், சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். முலுண்டில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஆலோசகர் சரும மருத்துவரும், குழந்தை மற்றும் ஒப்பனை சரும மருத்துவருமான டாக்டர் ஸ்மிருதி நஸ்வா கூறுகையில், சருமத்தின் ஈரப்பதம் குறைவதால், சரும பராமரிப்பு பிரச்சினைகளைக் கையாள்வது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
* சாதாரண சருமம் உள்ள ஒருவர் திக்கான மாய்ஸ்சரைசரை (லோஷன் அல்லது ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்ச்சரைசருக்கு பதிலாக கிரீம் அடிப்படையிலானது) பயன்படுத்தத் தொடங்க வேண்டும் மற்றும் ஈரமான சருமத்தில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை முழு உடலிலும் தடவ வேண்டும்.
* முகப்பரு பாதிப்புள்ள சருமம் உள்ளவர்கள், லேசான non-comedogenic க்ளென்சருக்கு மாறுங்கள். ஒருவர் AHA/BHA ஃபேஸ் வாஷ்களை முற்றிலும் விலக்க வேண்டும். non-comedogenic மாய்ஸ்சரைசர் அவசியம் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லியுடன் உதடு பராமரிப்பு முக்கியம்.
* வறண்ட சருமம் மிக மோசமானது. வறண்ட சருமம் உள்ளவர்கள் ஈரமான சருமத்தில் திக்கான மாய்ஸ்சரைசர்களை பலமுறை தடவ வேண்டும்.
* துண்டு கொண்டு சருமத்தை தேய்த்தல் சரும எரிச்சலை ஏற்படுத்தும். அதனால், அதனை செய்ய கூடாது. துண்டை வைத்து துடைப்பதுதான் ஆரோக்கியமான வழி.
* அடோபிக் டெர்மடிடிஸ் (சரும ஒவ்வாமை), அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் இக்தியோசிஸ் நோயாளிகள் இந்த பருவத்தில் ஆண்டுதோறும் விரிவடைவதைக் காணலாம். எனவே, வியர்வை, சருமத்துடன் நேரடியாகக் கம்பளி தொடர்பு மற்றும் துண்டு கொண்டு தேய்த்தல் போன்ற தூண்டுதல்களைத் தவிர்க்கவும். அறியப்பட்ட ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்த்து, மன அழுத்தமில்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
* சில உடல் பகுதிகளுக்கு சிறப்பு கவனிப்பு தேவை - ஏனெனில் அவை குளிர்காலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. மேலும் உதடுகள், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் போன்றவைக்கு பராமரிப்பு அவசியம்.
* ஒவ்வொரு கை கழுவிய பிறகும் கைகளை மாய்ஸ்ச்சரைஸ் செய்ய மறந்துவிடாதீர்கள்.
* தலைமுடி, குறிப்பாக அலை அலையான மற்றும் சுருள் முடி உள்ளவர்கள், இயல்பிலேயே வறண்ட மற்றும் ஃப்ரிஸ்-பாதிப்பு உள்ளவர்கள், சல்பேட் இல்லாத ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். முடிக்கு சிலிகான் இல்லாத கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். மேலும் ஒவ்வொரு வாரமும் அல்லது பதினைந்து நாட்களுக்கும் ஆழமான கண்டிஷனிங் (சூடான துண்டுடன்) செய்ய முயற்சிக்கவும்.
* பொடுகு பிரச்சனைகளை இந்த சீசனில் அதிகம் காணலாம். பொடுகைக் கட்டுப்படுத்தவும், உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் பூஞ்சை எதிர்ப்பு ஷாம்பூவை பரிந்துரைக்க உங்கள் சரும மருத்துவரிடம் கேளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil