/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-08T162019.636.jpg)
Almonds, face, skin treatment, பாதாம்,மாஸ்க், சருமம்,பராமரிப்பு
இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு குளிர்காலத்தில் முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை உணர்வார்கள்.
சரும பராமரிப்புக்கு என சந்தையில் விற்கும் விலை அதிகமான பொருட்களை வாங்கி உபயோகிப்பதை தவிருங்கள்.
பாதாமில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஏ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது. இது உங்கள் சரும துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
பாதாம் மற்றும் பால் கலந்த ஃபேஸ் மாஸ்க்
1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
2 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்
ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவி விட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
2. பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்
2 டேபிள்ஸ்பூன் பாதாம்
1 டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்ஸ்
3 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்
ஒருபவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்குப் போவதற்கு முன் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடலாம். ரோஜா தண்ணீரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு. இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம். பின் நைட் கிரீம்மை பயன்படுத்தவும்.
3. பாதாம், மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்
1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்
ஒரு பவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.