அரைத்த ஆளி விதைகள், அரிசி, பாதாம் மற்றும் காபியுடன் பச்சை பால், வைட்டமின் ஈ காப்ஸ்யூல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிரும் சருமத்தை பெற முடியுமா?
”நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் டிரை மிக்ஸரை அரைப்பது தான். இதை 15 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
பொடியுடன் சிறிது பச்சை பால் மற்றும் 1 வைட்டமின் ஈ காப்ஸ்யூலுடன் கலக்கவும். இதை 5-7 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவவும். நன்றாக உலர்ந்ததும் கழுவவும், என்று இன்ஸ்டா யூஸர் தீபிகா அரோரா அந்த வீடியோவில் கூறினார்.
இந்த தீர்வு உண்மையில் வேலை செய்யுமா?
ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டி ஏஜிங் பண்புகள் காரணமாக பல்வேறு தோல் பராமரிப்பு பொருட்களில் காணப்படும் முக்கிய பொருட்களில் காபி உள்ளது, என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். காபி பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும் என்றாலும், அதை நேரடியாக முகத்தில் தடவுவது தோல் எரிச்சலை ஏற்படுத்தும்.
குறிப்பாக அதிகப்படியான காபியை உங்கள் முகத்தில் தடவுவதற்கு எதிராக டாக்டர் ஷரீஃபா சாஸ் எச்சரித்தார். (dermatologist and cosmetologist, Shareefa’s Skin Care Clinic)
இதேபோல், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் தங்கள் முகத்தில் ஆளி விதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது பல்வேறு ஒவ்வாமைகளைத் தூண்டும் மற்றும் சொறி, எரிச்சல் உணர்வுகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்தும்.
பொடி கொரகொரப்பாக இருப்பதால், உங்கள் முகத்தில் நன்றாக இல்லாமல் போகலாம்.
உங்கள் முகத்தின் தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால், உங்கள் முகத்தில் எதையும் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். எந்தவொரு ஒவ்வாமை எதிர்வினையையும் தவிர்க்க, உங்கள் முகத்தில் புதிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும், என்று டாக்டர் சாஸ் கூறினார்.
Read in English: This DIY mixture promises glowing skin; we decode its effectiveness
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“