Advertisment

எண்ணெய், பருக்கள், வறண்டது.. உங்கள் சரும வகையைக் கண்டறிவது எப்படி?

Skincare identify your skin type with this easy method Tamil News "காலையில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவி ஒரு மணி நேரம் காத்திருங்கள். ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து உங்கள் முகத்தைச் சுற்றித் துடைக்கவும்”என்று சரும மருத்துவர் பரிந்துரைத்தார்.

author-image
WebDesk
Aug 18, 2021 15:38 IST
Skincare identify your skin type with this easy method Tamil News

Skincare identify your skin type with this easy method Tamil News

Skincare identify your skin type with this easy method Tamil News : நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு சருமம் அல்லது தோல்தான். இது, நுண்ணுயிரிகள், தீங்கு விளைவிக்கும் கூறுகள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. எனவே, இதற்காக சிறப்பு கவனம் செலுத்துவது மற்றும் ஒருவரின் சருமத்தைப் பராமரிப்பது அவசியம்.

Advertisment

ஆனால், எந்த ஒரு சரும பராமரிப்பு தயாரிப்புகளை முயற்சி செய்வதற்கு முன்பும், உங்கள் சரும வகையைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்கள் சரும பராமரிப்பு பயணத்தின் முதல் படி உங்கள் சரும வகையைத் தெரிந்துவைத்துக்கொள்வதுதான். இதனால், நீங்கள் சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். அதற்கான தீர்வும் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்.

உடற்தகுதி பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவாலா சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், சரும மருத்துவர் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஷரத் பல்வேறு சரும வகைகளையும் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதையும் விளக்குகிறார்.

வெவ்வேறு சரும வகைகள் என்ன?

டாக்டர் சரத் பின்வரும் சரும வகைகளைப் பட்டியலிட்டார்.

*நார்மல் சருமம்

*எண்ணெய் சருமம்

*உலர்ந்த சருமம்

*காம்பினேஷன் சருமம்

*சென்சிடிவ் சருமம்

*முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம்

*பிக்மென்ட் சருமம்

உங்கள் சரும வகையை எப்படி அடையாளம் காண்பது?

"காலையில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவி ஒரு மணி நேரம் காத்திருங்கள். ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து உங்கள் முகத்தைச் சுற்றித் துடைக்கவும்”என்று சரும மருத்துவர் பரிந்துரைத்தார்.

*டிஷ்யூ பேப்பர் மென்மையாக இருந்தால், உங்களுக்கு நார்மல் சருமம் இருக்கும்.

*அது பேட்சியாக இருந்தால், உங்களுக்கு எண்ணெய் சருமம் இருக்கும்.

*T-மண்டல இணைப்பு இருந்தால், அது நார்மல் சருமம்.

*உங்கள் சருமம் மிகவும் வறண்டதாக உணர்ந்தால், அது வறண்ட சருமம்.

*உங்கள் சருமத்தில் மிகவும் எளிதில் ராஷஸ் வந்துவிட்டால், உங்களுக்கு சென்சிடிவ் சருமம் உள்ளது.

*நீங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு முகப்பரு வந்தால், ​​உங்களுக்கு முகப்பரு பாதிப்புள்ள சருமம் இருப்பதாக அர்த்தம்.

*உங்கள் சருமம் டேமேஜ் ஆனால், ​​உங்களுக்கு பிக்மென்ட் சரும வகை.

சரும வகை மாறுமா?

"வயது, காலநிலை, ஹார்மோன்கள், கர்ப்ப காலத்தில் அல்லது உங்களுக்கு பிசிஓஎஸ் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் இருந்தாலோ மற்றும் முகத்தில் நீங்கள் பயன்படுத்தும் வகை வகையான பொருட்களுடன் சரும வகைகள் மாறலாம்" என்று அவர் மேலும் கூறினார்.

"குளிர்ந்த வெப்பநிலையில், நார்மல் சருமம் வறண்டு போவதும், எண்ணெய் சருமம் நார்மல் ஆவதும் இயல்பு" என்று அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Skin Care
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment