உண்மை என்னவென்றால், நம் சருமத்தை நாம் நேசிக்கிறோம், இன்று மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் சில வீட்டு வைத்தியங்களைக் கண்டறியும் எங்கள் தேடலில், ஆரோக்கியமான சருமத்திற்கு DIY நைட் க்ரீம் தயாரிக்க குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கும் வீடியோவை நாங்கள் பார்த்தோம்.
குங்குமப்பூ நைட் க்ரீம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
சில குங்குமப்பூ இழைகள்
சிறிய கண்ணாடி பாட்டில்
2 ஸ்பூன் புதிய அலோ வேரா ஜெல்
2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்
1 ஸ்பூன் பாதாம் எண்ணெய்
ரோஸ் வாட்டர் சில துளிகள்
ஒரு டிஷ்யூ பேப்பரில், சில குங்குமப்பூ இழைகளை வைத்து மடிக்கவும். ஒரு தவாவில் 1 நிமிடம் சூடாக்கவும்.
இந்த குங்குமப்பூ இழைகளை ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் போடவும்.
2 ஸ்பூன் புதிய கற்றாழை ஜெல், 2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய், சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தின் படி, இந்த கிரீம்
தோல் பளிச்சிட உதவுகிறது.
கரும்புள்ளிகளை நீக்குகிறது.
சுருக்கங்களை குறைக்கிறது.
இந்த கிரீமை 2 மாதங்கள் வரை சேமித்து பயன்படுத்தலாம்.
குறிப்பு: தோல் பராமரிப்பு முடிவுகள் பெரும்பாலும் நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், தோல் பராமரிப்பு என்பது தூக்கம், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி பழக்க வழக்கங்களின் ஒரு முழுமையான நடைமுறை என்பதை புரிந்துகொள்வது அவசியம்
உங்களுக்கு குறிப்பிட்ட தோல் நிலைமைகள் இருந்தால், தனிப்பட்ட ஆலோசனைக்கு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“