உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வதற்கு அர்ப்பணிப்பும், நிலையான முயற்சிகள் தேவை. பலர் தங்கள் தோல் பிரச்சனைகளைத் தீர்க்க தோல் பராமரிப்புப் பொருட்களைத் தேர்வு செய்கிறார்கள், சிலர் தலைமுறைகளாக அவர்களுக்குக் கடத்தப்பட்ட பல்வேறு வீட்டு வைத்தியங்களை நம்பியிருக்கிறார்கள்.
ஆனால், அவை உண்மையில் பயனுள்ளதா? தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்த் கருத்துப்படி, அவை எந்த சிக்கலையும் சரி செய்யாது, கரும்புள்ளிகளை குறைக்காது அல்லது தோலின் தரத்தை மேம்படுத்தாது.
இருப்பினும், வீட்டு வைத்தியம் உங்கள் சருமத்திற்கு எந்த நன்மையும் செய்யாது என்று அர்த்தமல்ல. வல்லுநர்கள் அவை நன்மை பயக்கும் வழிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
*ஃப்ரூட் பேக்ஸ் சருமத்தை ஈரப்பதமாக்க உதவும்.
*ஐஸ் மற்றும் குளிர்ந்த வெள்ளரியைப் பயன்படுத்துவதால் வீக்கமடைந்த சருமம் குணமாகிறது.
*ரெஸ்னெஸ் குறைய, கற்றாழை அல்லது ஐஸ் கியூப்ஸ் பயன்படுத்தலாம்.
மாவு, ஆரஞ்சு தோல் பொடி, வால்நட் மற்றும் காபி ஸ்க்ரப் போன்றவை சருமத்தை எக்ஃபாலியேட் செய்ய உதவுகின்றன.
எந்த வீட்டு வைத்தியம் வேலை செய்யாது?
சருமத்திற்கு என்ன வீட்டு வைத்தியம் உதவாது என்பது இங்கே.
*முகப்பரு, கரும்புள்ளிகள் அல்லது வெண்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்க
* மெலஸ்மா (melasma) சிகிச்சை அளிக்க
* கரும்புள்ளிகளைக் குறைக்க
*கொலாஜன் உருவாவதை அதிகரிக்க
* சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க
* சென்சிட்டிவ் சருமத்தை மேம்படுத்த
* தோல் அலர்ஜிக்கு சிகிச்சை அளிக்க
இந்த வீட்டு வைத்தியம் உங்கள் சருமத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வர முடியாது என்ற போதிலும், அவை தொடர்ந்து பிரபலமாக உள்ளன, ஏனெனில் அவை ஒரு நல்ல உணர்வை தருகின்றன என்று நிபுணர் நம்புகிறார்.
இது மலிவானது. மேலும், ஃபேஸ் பேக்கைப் போடும்போது, நீங்கள் நிதானமாகவும் ஓய்வெடுக்கவும் செய்கிறீர்கள். இதுவே, உங்கள் சருமத்தை அழகாக்குகிறது.
தோல் மருத்துவர் நவ்யா ஹண்டா கூறுகையில், சருமத்திற்கு வீட்டு வைத்தியம் செய்யும் போது, சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
முதலில், ஒவ்வொருவரின் சருமமும் தனித்தன்மை வாய்ந்தது, எனவே ஒருவருக்கு வேலை செய்வது மற்றொருவருக்கு வேலை செய்யாமல் போகலாம். இரண்டாவதாக, சில வீட்டு சிகிச்சைகள் அவற்றின் செயல்திறனை நிரூபிக்க போதுமான அறிவியல் தரவுகளைக் கொண்டிருக்கவில்லை.
மூன்றாவதாக, எந்தவொரு புதிய பொருட்களையும் சருமத்தில் பயன்படுத்தும் முன்பு, எதிர்மறையான விளைவுகளை தடுக்க பேட்ச் சோதனை செய்யப்பட வேண்டும்.
இறுதியாக, எந்தவொரு வீட்டு சிகிச்சையையும் முயற்சிக்கும் முன், குறிப்பாக உங்களுக்கு முன்பே தோல் நோய் இருந்தால் அல்லது சாத்தியமான ஆபத்துகள் அல்லது சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்டால் தோல் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும், மேலும், ஒவ்வாமை உள்ளதா என்பதை சரிபார்க்க எப்போதும் பேட்ச் டெஸ்ட், செய்யவும் என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“