இனிப்பு உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால், சர்க்கரை வீக்கம் மற்றும் முகப்பருவை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது, மேலும் உங்கள் சருமத்தின் கொலாஜனை சேதப்படுத்தி, விரைவாக வயதாக வழிவகுக்கிறது.
எனவே, வெல்லம், சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்படுகிறது. ஆனால் இது சருமத்திற்கும் நன்மை பயக்குமா?
இரண்டு இனிப்புப் பொருட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இவை இரண்டும் கலோரிகள் நிறைந்தவை என்றாலும், வெல்லம் இன்னும் சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாகும் என்கிறார் டாக்டர் அங்கூர் சரின்.
சர்க்கரையைப் போலல்லாமல், வெல்லத்தில் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான விருப்பமாக அமைகிறது. கூடுதலாக, இது மிகவும் மெதுவாக உறிஞ்சப்படுகிறது, இதனால் இன்சுலின் உயர்வு குறைகிறது.
சருமத்தில் சர்க்கரையின் தாக்கம்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (Refined sugar) உங்கள் சருமத்திற்கு நல்லதல்ல. டாக்டர் இஷான் சர்தேசாய் கூறும் போது, நம் ரத்த ஓட்டத்தில் அதிகப்படியான சர்க்கரை, கிளைகேஷனை (glycation) ஏற்படுத்தும், இது ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் இயற்கையான ரசாயன எதிர்வினை ஆகும். கிளைசேஷன் நமது தோலின் கொலாஜன் மற்றும் நெகிழ்வுத் தன்மையை பாதிக்கிறது.
கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவை சருமம் தோற்றமளிப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இன்றியமையாதது.
இந்த இரண்டு புரதங்களும் சர்க்கரை மூலக்கூறுகளுடன் இணைக்கப்படும்போது அவை பலவீனமடைகின்றன, மேலும் இந்த அத்தியாவசிய தோல் கட்டுமானத் தொகுதிகள் பலவீனமடையும் போது, வயதான அறிகுறிகள் மிகவும் தெளிவாகத் தெரியும்; தோல் வறண்டு, மீள்தன்மை குறையும்.
இதனால் சுருக்கங்கள், தொய்வு ஏற்படுவதோடு, சருமம் மந்தமாக இருக்கும். இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக எண்ணெய் மற்றும் சீபம் உற்பத்தி அதிகரிக்கிறது, இது முகப்பருவுக்கு வழிவகுக்கும், என்று அவர் கூறினார்.
சர்க்கரை vs வெல்லம்
சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டும் கரும்புச் சாற்றில் இருந்து பெறப்பட்டவை மற்றும் அதிக கலோரி உள்ளடக்கம் கொண்டவை என்றாலும் – வெல்லம் உங்கள் சருமத்திற்கு சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாகும்.
அதன் செயலாக்கம் தான் இந்த இரண்டு தயாரிப்புகளையும் வேறுபடுத்துவகிறது, உண்மையில் வெல்லம் ஒரு ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்படுகிறது, என்று தோல் மருத்துவர் ரிங்கி கபூர் கூறினார்.

வெல்லம் உங்கள் சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்யும், புள்ளிகளை நீக்கி, தெளிவான தோலின் தோற்றத்தை வழங்கும். வெல்லத்தில் கிளைகோலிக் அமிலம் இருப்பதால் இது செயல்படுகிறது, இது சருமத்தை எக்ஃபாலியேட் செய்கிறது மற்றும் முகப்பருவை குணப்படுத்த உதவுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லத்தை உட்கொள்வது ஆரோக்கியமான தேர்வாகும், ஏனெனில் வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளது.
எவ்வாறாயினும், இயற்கையாகவோ அல்லது சுத்திகரிக்கப்பட்டதாகவோ அதிகமான சர்க்கரை உணவை சாப்பிடுவது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்காது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த வகையான சர்க்கரை உணவுகளையும் உட்கொள்ளும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று மருத்துவர் எச்சரித்தார்.
வெல்லத்தின் வேறு சில ஆரோக்கிய நன்மைகள்
வெல்லம் ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு நல்லது, இரும்புச்சத்து நிறைந்துள்ளது, மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும் மற்றும் ரத்த சோகையை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த இனிப்பாகும். வெல்லத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பகிர்ந்து கொண்ட டாக்டர் கபூர், வெல்லம் சுவாச நோய்களுக்கான சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் அதன் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் சுவாச அமைப்பிலிருந்து நச்சு மற்றும் சளியை நீக்குகிறது.
ஆஸ்துமா, இருமல், சளி மற்றும் நெஞ்செரிச்சலை நீக்குகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது, மேலும் பல பாரம்பரிய இந்திய குடும்பங்களில் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுவதற்காக உணவுக்குப் பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
“சர்க்கரையை வெல்லத்துடன் மாற்றுவது ரத்த சோகை உள்ளவர்களுக்கு அவர்களின் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும்” என்று அவர் முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “