முகம் பளபளக்க முள்ளங்கி ஜூஸ் தடவலாமா? தோல் மருத்துவர் சொல்வது என்ன?
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் முள்ளங்கியை இணைத்துக்கொள்வதன் மூலம், முகப்பரு பாதிப்பு அல்லது சென்சிட்டிவ் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த முடியும், என்று டாக்டர் டிபிர்னேனி கூறினார்.
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் முள்ளங்கியை இணைத்துக்கொள்வதன் மூலம், முகப்பரு பாதிப்பு அல்லது சென்சிட்டிவ் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த முடியும், என்று டாக்டர் டிபிர்னேனி கூறினார்.
வீடியோ கிரியேட்டர் ஆர்மென் ஆடம்ஜான் ஒளிரும் சருமத்திற்கு முள்ளங்கி மற்றும் சிறிது தேனைப் பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
Advertisment
முள்ளங்கி உங்கள் சருமத்தை பளபளக்க வைக்கும்! இயற்கை அற்புதமானது, தோல் பராமரிப்பு பொருட்கள் அனைத்தையும் கடையில் வாங்க வேண்டிய அவசியமில்லை, நீங்களே உருவாக்குங்கள்!
முள்ளங்கியில் வைட்டமின் சி, துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பிற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. இது வறண்ட சருமத்தை கவனித்துக்கொள்கிறது. இது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் வராமல் உதவுகிறது, என்று ஆடம்ஜன் வீடியோவில் மேலும் கூறினார்.
இதுகுறித்து மேலும் அறிய நாங்கள் நிபுணரை அணுகினோம்
தோல் மருத்துவர், அழகு நிபுணர் மற்றும் ட்ரைக்கோலஜிஸ்ட் டாக்டர் ஸ்ரவ்யா சி திபிர்னேனி கூறுகையில், முள்ளங்கியில் இயற்கையாகவே சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகள் உள்ளன, மேலும் தோல் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.
அவை இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்களாக செயல்படும் என்சைம்களைக் கொண்டிருக்கின்றன, இறந்த சரும செல்களை மெதுவாக அகற்றி, புதிய செல்களை ஊக்குவிக்கின்றன. இந்த செயல்முறை புதிய, இளமையான சருமம் மற்றும் பளபளப்பான நிறத்திற்கு பங்களிக்கிறது, என்று டாக்டர் திபிர்னேனி கூறினார்.
முள்ளங்கி ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது, இதனால் அவை பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும், சிவப்பைக் குறைக்கவும், வீக்கமடைந்த சருமத்தை ஆற்றவும் உதவுகின்றன.
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் முள்ளங்கியை இணைத்துக்கொள்வதன் மூலம், முகப்பரு பாதிப்பு அல்லது சென்சிட்டிவ் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த முடியும், என்று டாக்டர் டிபிர்னேனி கூறினார்.
ஆட்ம்ஜான் பகிர்ந்த ஃபேஸ் மாஸ்க் ரெசிபி இங்கே..
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 1 சிறியது
ஆலிவ் எண்ணெய்
தேன்
எப்படி செய்வது?
முள்ளங்கியை எடுத்து தோலுரித்து கழுவவும். ஆலிவ் எண்ணெய் மற்றும் சிறிது தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
முள்ளங்கி பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும், இது உங்கள் சருமத்தை புதுப்பிக்கும், நீங்கள் உடனடியாக முடிவுகளைப் பார்க்கப் போகிறீர்கள், என்று ஆடம்ஜான் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
டாக்டர் டிபிர்னேனி முள்ளங்கியை சருமத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வேறு சில வழிகளைப் பகிர்ந்துள்ளார்
முள்ளங்கி டோனர்: சில முள்ளங்கியில் இருந்து சாறு எடுத்து, அதை சம அளவு தண்ணீரில் கரைக்கவும். உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு இதை டோனராக பயன்படுத்தவும். முள்ளங்கி டோனர், சருமத்தின் pH அளவை சமப்படுத்தவும், துளையின் அளவைக் குறைக்கவும் உதவும் என்று டாக்டர் டிபிர்னேனி கூறினார்.
முள்ளங்கி ஜூஸ் க்ளென்சர்: முள்ளங்கியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, ஒரு லிக்குவைட் கன்சிஸ்டன்ஸிக்கு அரைக்கவும். ஒரு காட்டன் பேடைப் பயன்படுத்தி உங்கள் முகத்தில் சாற்றை தடவவும், அழுக்கு மற்றும் அசுத்தங்களை மெதுவாக அகற்றவும்.
முள்ளங்கி சாறு ஒரு நேச்சுரல் க்ளென்சராக செயல்படுகிறது, இது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
இது வேலை செய்யுமா?
முள்ளங்கியில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கொலாஜன் உருவாவதற்கு உதவுகிறது என்று தோல் மருத்துவர் வந்தனா பஞ்சாபி கூறினார்.
இதில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, ஃபோலிக் அமிலம், கோஎன்சைம் க்யூ10, பாலிபினால்கள், அந்தோசயினின்கள் போன்ற தாதுக்கள் உள்ளன, அவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன.
இருப்பினும், முள்ளங்கியை உட்கொள்ளும்போது மட்டுமே இவை நம் உடலில் உறிஞ்சப்படுகின்றன, மேலும் மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது எந்தப் பலனும் இல்லை, என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.
தோல் மற்றும் கூந்தலில் முள்ளங்கி சாற்றின் பயன்பாட்டை நிறுவ அறிவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை. உண்மையில், எனது அனுபவத்தில், முள்ளங்கி சாறு, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன், ஆகியவை முகப்பரு மற்றும் தோல் அழற்சியைத் தூண்டி, பொடுகு மற்றும் முடி உதிர்வை மோசமாக்கும் பல நோயாளிகளை நான் பார்த்திருக்கிறேன், என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.
கண்மூடித்தனமாக தோல் பராமரிப்பு பழக்கங்களுக்கு எதிராக எச்சரிக்கும் டாக்டர் பஞ்சாபி, இயற்கையான அனைத்தும் பாதுகாப்பானது என்பது ஒரு கட்டுக்கதை என்று குறிப்பிட்டார். என்னிடம் பல நோயாளிகள் உள்ளனர், அவர்கள் தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதில் சந்தேகம் கொண்டுள்ளனர், ஏனெனில் அவை தோல் மற்றும் முடிக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தோல் மருத்துவரை அணுகும்முன் அவர்கள் ஏற்கனவே பல வீட்டு வைத்தியங்களை முயற்சித்துள்ளனர், இது அவர்களின் தோல் மற்றும் கூந்தல் நிலைமைகளை மோசமாக்கியது.
அனைத்து நோயாளிகளுக்கும் எனது அறிவுரை என்னவென்றால், வீட்டு வைத்தியம் எப்போதும் பாதுகாப்பானது அல்ல, என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“