ஆண்களே... உங்க முகம் உடனே பளபளக்கும்; இந்த 3 ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

சரியான பராமரிப்பின்மை காரணமாக பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படலாம். எனவே, ஆண்களும் தோல் பராமரிப்பை ஒரு முக்கியமான உடல்நலப் பழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

சரியான பராமரிப்பின்மை காரணமாக பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படலாம். எனவே, ஆண்களும் தோல் பராமரிப்பை ஒரு முக்கியமான உடல்நலப் பழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
download (26)

ஆண்கள் தோல் பராமரிப்பை கவனிக்க வேண்டியதில்லை என்ற பழமையான எண்ணம் இப்போது மாறிவருகிறது. இன்று, பலரும் சுறுசுறுப்பாக தோலை பாதுகாக்கும் பழக்கங்களை ஏற்க ஆரம்பித்துள்ளனர். பெண்கள் போல் ஆண்களுக்கும் சருமப் பராமரிப்பு அவசியமே. வேலைப்பளு, தூக்கமின்மை, வெளியிலே அதிக நேரம் கழிப்பது, தூசு மற்றும் மாசுபாடு ஆகியவை ஆண்களின் சருமத்தையும் பாதிக்கின்றன.

Advertisment

தோலை தினமும் இரு முறையும் சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். இது அழுக்கையும் எண்ணெய் படிந்ததையும் அகற்ற உதவுகிறது. வாரத்தில் ஒரு முறை ஸ்க்ரப் பயன்படுத்தி இறந்த தோல் செல்களைக் கிளியர் செய்வது நல்லது. தினசரி ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி தோலை ஈரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் ஏற்படுத்தும் சேதத்தைத் தடுக்கும் வகையில், சன்ஸ்க்ரீனும் அவசியம்.

மேலும், போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதும், தூக்கத்தை உறுதி செய்வதும், சத்தான உணவுகளைச் சாப்பிடுவதும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. சில நேரங்களில் முகத்தில் தோன்றும் பிம்பிள், கரும்புள்ளிகள் போன்றவை சரியான பராமரிப்பின்மையால் ஏற்படலாம். எனவே, ஆண்களும் சரும பராமரிப்பை ஒரு முக்கியமான உடல்நலப் பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதெனில், அழகு மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது தோல் பராமரிப்பு. எளிய வழிமுறைகளை வீட்டிலேயே பின்பற்றுவதன் மூலம் ஆண்கள் தங்களது தோலை சுத்தமாகவும் சீராகவும் வைத்துக்கொள்ளலாம். அப்படி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ் பார்க்கலாம் இந்த பதிவில். 

Advertisment
Advertisements

istockphoto-463617439-612x612

கிலென்சிங்

முதலில் கொஞ்சம் காபி தூள், சர்க்கரை மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அந்த கலவையை நன்கு உங்கள் முகத்தில் தேய்த்து ஸ்க்ரப் செய்ய வேண்டும். இது உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். அதன் பிறகு உங்களுடைய முகத்தை நன்கு வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளவும். 

ஐஸ் பேஷியல்

அடுத்ததாக கொஞ்சம் ஐஸ் கட்டிகளை எடுத்து உங்கள் முகத்தில் நன்கு மசாஜ் செய்து கொள்ளவும். இது உங்கள் சருமத்தை பிரெஷாக பளீச்சென்று வைத்திருக்க உதவும். 

istockphoto-803921518-612x612

பேஸ் பேக்

அடுத்ததாக பேஸ் பேக் போடுவதற்கு கடலை மாவு, தயிர் மற்றும் தேன் கலந்து ஒரு நல்ல பேஸ்ட் போல எடுத்து உங்கள் முதல் பேக் போடவும். இதை ஒரு 15 நிமிடங்கள் காயும் வரை வைத்து விட்டு பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு மசாஜ் செய்து கழுவவும். 

ஸ்கின் கேர்

கடைசியாக முகத்தை நன்கு கழுவிய பின்பு உஙகள் பேஸ் மாய்ஸ்சரைசர் போட்டு நன்கு மசாஜ் செய்து விட்டால் உஙகள் முகத்தில் ஒரு இன்ஸ்டன்ட் பிரைட்னஸ் கண்டிப்பாக தெரியும். 

பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று தான். அதனால் ஆண்கள் இந்த எளிய டிப்ஸ்களை பயன்படுத்தி உஙகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருங்கள். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: