Skincare Tips Tamil : பயணம் பிடிக்காதவர்கள் யார்தான் இங்குண்டு! ஆனால், இந்த நீண்டகால லாக்டவுன் பலரை வீட்டிலேயே முடக்கிவிட்டது. பெரிய இடைவெளியைத் தொடர்ந்து வெளியில் பயணம் செல்லும்போது, ஏராளமான சரும மாற்றங்கள் நிகழும். அதுபோன்ற சரும பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையும் இனி பார்க்கலாம்.
டிராவல் பாஸ்கெட்
உங்களுடைய சருமம் மிகவும் சென்சிடிவ் என்றால் நிச்சயம் உங்கள் கைகளில் சிறிய டிராவல் பாஸ்கெட் இருப்பது அவசியம். அந்த பாஸ்கெட்டில் ஃபேஸ் வாஷ், மாய்ஸ்ச்சரைசர், சன்ஸ்க்ரீன் லோஷன், லிப் பால்ம், சானிடைசர், வெட் டிஷ்யூ, ட்ரை டிஷ்யூ, ரெஃப்ரெஷிங் ஸ்ப்ரே உள்ளிட்ட பொருள்களை பேக் செய்துகொள்ளுங்கள். எந்தவித வாகனமாக இருந்தாலும் சரி, பயணத்தின்போது ஒப்பனையைத் தவிர்ப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக ஃபவுண்டேஷன் க்ரீம், காம்பேக்ட் பவுடர் போன்றவை சருமத் துவாரங்களை அடைத்து, சரும சுவாசத்தைத் தடை செய்துவிடும். இதனால், முகப்பரு, ராஷஸ் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால், தேவைப்படும்போது முகத்தை நன்கு கழுவித் துடைத்து, மாய்ஸ்ச்சரைசரை அவ்வப்போது தடவிக்கொள்ளுங்கள். எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள், தரமான ஃபேஸ் வாஷ் தேர்ந்தெடுத்து அடிக்கடி முகத்தைக் கழுவி, முகத்தில் இருக்கும் எண்ணெய்யை அகற்றுங்கள். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உதடுகளைச் சுத்தம் செய்து, லிப் -பால்ம் தடவலாம். இது உதட்டை வறண்டுபோகாமல் வைத்துக்கொள்ளும்.
கொரோனா காலகட்டம் என்பதால் வெளியே சென்று வீடு திரும்பியதும் குளிப்பது அவசியம். இதனைத் தொடர்ந்து முல்தானிமட்டியில் கொஞ்சம் எலுமிச்சை சாறு அல்லது தக்காளிச் சாறு அல்லது தயிர் கலந்து, இந்த பேக்கை முகம் மற்றும் வெயிலில் பாதிக்கப்பட்ட கை, கால், கழுத்துப் பகுதிகளில் தடவி, இருபது நிமிடங்களுக்குப் பிறகு கழுவுங்கள். அளவுக்கு அதிகமான வியர்வையினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட ஆன்ட்டி - பெர்ஸ்பிரேஷன் (Anti-perspiration) கிரீம் பயன்படுத்தலாம்.
குளிக்கலாம் பொதுவாகவே சோம்பலைத் தரும். பெரும்பாலானவர்கள் இந்தக் காலத்தில் குளிக்க மாட்டார்கள்.ஆனால், மிதமான நீரில் குளிப்பது சிறந்தது. இது சரும ஒவ்வாமையிலிருந்து காப்பாற்றும். எவ்வளவுதான் வெளிப்புற சருமத்தைப் பாதுகாக்க க்ரீம்கள் மற்றும் மற்ற பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்தினாலும், அவ்வப்போது தண்ணீர் குடிப்பது சருமத்தை எப்போதும் ஃப்ரெஷாக வைத்திருக்க உதவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"