ஒளிரும் சருமம், முகப்பரு, கருவளையங்கள் நீங்க என்று பல பிரபலமான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அத்தகைய ஒரு தீர்வு, கண்களுக்குக் கீழே குளிர்ந்த பாலை தடவுவது, இது கண் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்களைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
எனவே, இது உண்மைதானா என்பதை அறிய நாங்கள் நிபுணர்களை அணுகினோம்.
அதன் நன்மைகளை ஆதரிக்கும் ஆதாரங்கள் இருந்தாலும், இந்த குறிப்பிட்ட முறை பற்றிய அறிவியல் ஆராய்ச்சி குறைவாகவே உள்ளது. பாலில் வைட்டமின்கள் ஏ மற்றும் டி, லாக்டிக் அமிலம் மற்றும் புரோட்டீன்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை தோல் பராமரிப்புக்கு பங்களிக்கக்கூடும்.
குளிர்ந்த பால் சருமத்தில் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்தும் மற்றும் தற்காலிகமாக வீக்கத்தை குறைக்கும் என்று விதி சாவ்லா (Fisico Diet and Aesthetic Clinic) கூறினார்.
குளிர்ந்த வெப்பநிலை, ரத்த நாளங்களைச் சுருக்கி, கருவளையங்கள் தோற்றத்தைக் குறைக்கும். லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை வெளியேற்றலாம், இது ஒரு மென்மையான தோற்றத்திற்கு வழிவகுக்கும்.
எவ்வாறாயினும், மரபு, முதுமை, சூரிய ஒளி மற்றும் பிற காரணிகளை மனதில் வைத்திருப்பது முக்கியம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர், ஏனெனில் அவை "கண் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்களின் வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கின்றன.
மரபியல், தூக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுவதாகவும், வயதான மற்றும் சூரிய ஒளியில் சுருக்கங்கள் ஏற்படுவதாகவும் கூறிய டாக்டர் ரிங்கி கபூர், (consultant dermatologist, cosmetic dermatologist, and dermato-surgeon, The Esthetic Clinics) குளிர்ந்த பாலை கண்களுக்கு அடியில் தடவுவது தற்காலிகமாக வீக்கத்தைக் குறைத்து சருமத்தை ஆற்றும், ஆனால் இது ஒரு நீண்ட கால தீர்வாகாது என்றார்.
வீட்டு வைத்தியம் மட்டும் குறிப்பிடத்தக்க அல்லது நீடித்த முடிவுகளை வழங்காது.
மிகவும் பயனுள்ள நீண்ட கால பலன்களுக்கு சன்ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் ரெட்டினோல், ஹைலூரோனிக் ஆசிட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடங்கிய விரிவான தோல் பராமரிப்பு வழக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும், என்று சாவ்லா கூறினார்.
டாக்டர் கபூர் பரிந்துரை செய்தது இங்கே..
*போதுமான தூக்கம்
களைப்பினால் ஏற்படும் கருவளையங்களைக் குறைக்க 7-9 மணி நேரம் தரமான தூக்கம் அவசியம்.
*ஆரோக்கியமான வாழ்க்கை முறை
சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நீரேற்றத்துடன் இருப்பது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
*ஸ்கின்கேர் பிரொடக்ட்ஸ்
சுருக்கங்கள் மற்றும் கருவளையங்களை குறைக்க ரெட்டினோல், ஹைலூரோனிக் ஆசிட், வைட்டமின் சி போன்ற ஐ கிரீம் அல்லது சீரம் பயன்படுத்துங்கள்.
*சூரிய ஒளி
கண்களுக்குக் கீழே உள்ள பகுதியில் சுருக்கங்கள் மற்றும் கருமையை ஏற்படுத்தும் சூரிய பாதிப்பைத் தடுக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும் மற்றும் சன்கிளாஸ்களை அணியவும்.
*சிகிச்சை
மிகவும் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுக்கு டெர்மல் ஃபில்லர்ஸ் அல்லது லேசர் தெரபி (dermal fillers or laser therapy) போன்ற விருப்பங்களுக்கு தோல் மருத்துவரை அணுகவும்.
Read In English: Myth or fact: Does applying cold milk under the eyes reduce dark circles?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.