குளிர்காலத்தில் உங்கள் சருமம் சீக்கிரமாக வறண்டுவிடுகிறதா? தப்பிக்க சூப்பரான 7 டிப்ஸ்

சருமம் கடினமாகிவிடும். இதனை தடுக்க உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதும், நமது சருமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதலும் அவசியம்.

moisturiser, beauty tips, winter season,

குளிர்காலம் துவங்கவிருக்கிறது. இந்த பருவத்தில் பெண்களை அதிகமாக பாதிக்கும் ஒரு விஷயம் வறண்ட சருமம். சீக்கிரமாகவே சருமம் வறண்டுவிடும், சருமம் கடினமாகிவிடும். இதனை தடுக்க உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதும், நமது சருமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதலும் அவசியம்.

குளிர்காலத்தில் வறண்ட சருமத்திலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என அழகியல் நிபுணர்கள் தெரிவிக்கும் சில வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

1. குளிர்ந்த நீரில் 20 நிமிடங்கள் வரை இருப்பதை தவிர்த்து, 10 நிமிடங்கள் மட்டுமே இருக்குமாறு குளியல் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் குளிப்பது, உங்கள் சருமத்தின் நீர்ச்சத்தை குறைத்துவிடும். குளிர்ந்த நீரைவிட வெந்நீர், விரைவிலேயே சருமத்தின் எண்ணெய் பதத்தை நீக்கும்.

2. குளிர்காலத்தில் சருமமானது ஈரப்பதத்தை இழந்துவிடும். அதனால், ஈரப்பதத்தை நடுநிலையுடன் வைத்துக்கொள்ளுதல் சற்று சிரமம். அதனால் உங்களுடைய மாய்ஸ்சுரைஸர் க்ரீமை எப்போதும் உங்களுடனேயே வைத்திருங்கள். தரமான மாய்ஸ்சுரைசரா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

3. ப்ரௌன் சுகர் மூலம் வீட்டிலேயே லிப் ஸ்க்ரப் தயாரிப்பது சுலபம். லிப் ஸ்க்ரப்பை மென்மையாக உங்கள் உதடுகளில் மெதுவாக தடவ வேண்டும். அதனால், உங்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் அழிக்கப்படும். அதன்பின், சில நிமிடங்கள் கழிந்து வெந்நீர் அல்லது குளிர்ச்சியான நீரில் கழுவுங்கள். அதன்பி பெட்ரோலியம் ஜெல்லி அல்லது லிப் பாம்/வெண்ணெய் தடவலாம்.

4. சருமத்தை மீட்டெடுக்க உங்களுடைய தோல் சிகிச்சை நிபுணரை அனுகலாம். மாதத்திற்கு ஒருமுறை ஃபேசியல் செய்யலாம்.

5. க்ளென்சர்ஸ் க்ரீம்களை பயன்படுத்தலாம். அது உங்கள் சருமத்தில் இறந்த செல்களை அழித்து பொலிவை தரும்.

6. கற்றாழை பசையை குளிர்காலத்தில் உபயோகித்தல் நல்ல பயனை தரும். லாவண்டர் எண்ணெயுடன் கலந்த கற்றாழை பசையை உபயோகித்தால் உங்கள் சருமம் உயிர்ப்புடன் இருக்கும்.

7. ஸ்கர்ப்கள், மாஸ்க், சருமத்திற்கு ஏற்ற சோப்புகளை பயன்படுத்த துவங்குங்கள்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Skincare tips to keep in mind for winter season

Next Story
சுவையான, சத்தான கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?curry leaves gravy recipe, food recipes, delecious food, healthy food
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com