நாம் அனைவரும் தெளிவான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை விரும்புகிறோம். எவ்வாறாயினும், நமது ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் மாசுபட்ட சுற்றுச்சூழலுக்கு மத்தியில், களங்கமில்லாத சருமத்தை அடைவது கடினமான ஒன்று. சருமம் அழகாக இருக்க, இணையத்தில் படிக்கும் ஒவ்வொரு வீட்டு வைத்தியத்தையும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால், அவை வேலை செய்கிறது என்றால், எப்பொழுதும் இல்லை!
அதில் ஒன்றுதான் வைட்டமின் சி காப்ஸ்யூல். இதை பலர் நசுக்கி, அதன் எண்ணெய்யை முகத்தில் நேரடியாக அப்ளை செய்கின்றனர். இருப்பினும், டேப்லெட்டை நசுக்கி தோலில் தடவுவது வேலை செய்யாது என்று தோல் மருத்துவர் ஆஞ்சல் பாந்த் கூறுகிறார்.
வைட்டமின் சி டேப்லெட்
வைட்டமின் சி சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றியாகும், ஆனால் வைட்டமின் சி மாத்திரையை நசுக்கி, கிளிசரின் அல்லது ரோஸ் வாட்டரில் கரைத்து, அதைப் பயன்படுத்துவது வேலை செய்யாது. வைட்டமின் சி-யின் பலன்களை நீங்கள் பெறமாட்டீர்கள். வைட்டமின் சி மிகவும் நிலையற்ற மூலக்கூறு. இது பயனுள்ளதாக இருக்க ஒரு குறிப்பிட்ட pH இல் சரியான பொருளுடன் கரைக்கப்பட வேண்டும்.
எப்படி உபயோகிப்பது?
மருத்துவர் ஆஞ்சல் வைட்டமின் சி சீரம் பயன்படுத்த பரிந்துரைத்தார். அது விலை உயர்ந்ததாகக் இருந்தால், காலையில் வாரத்திற்கு 2-3 முறை மட்டுமே பயன்படுத்தவும். இந்த வழியில் ஒரு பாட்டில் உங்களுக்கு 3 மாதங்கள் நீடிக்கும். நீங்கள் இன்னும் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள்.
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
வைட்டமின் ஈ காப்ஸ்யூலை உடைத்து அந்த எண்ணெயை முகம் மற்றும் கூந்தலில் தடவுவது ஒரு பொதுவான நடைமுறை. இருப்பினும், இது உண்மையான பலனைத் தராது. இது எண்ணெய் தடவுவது போன்றது. முடியின் மீது இதைப் பயன்படுத்துவதால் எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆனால் தோலில், அது உண்மையில் எரிச்சலையும் சில சமயங்களில் முகப்பருவையும் ஏற்படுத்தக்கூடும்.

எப்படி உபயோகிப்பது?
அதற்கு பதிலாக வைட்டமின் ஈ கிரீம்களைப் பயன்படுத்த நிபுணர் பரிந்துரைத்தார்.
டிஸ்ப்ரின் மாத்திரை
அசிடைல்சாலிசிலிக் அமிலம் இருப்பதால் முகப்பருவைப் போக்க பலர் டிஸ்ப்ரின் மாத்திரைகளைப் (Disprin tablets) பயன்படுத்துகின்றனர். ஆனால், இது தோலில் காயங்களைப் ஏற்படுத்தலாம். தயவுசெய்து இந்த ஹேக் செய்வதிலிருந்து விலகி இருங்கள்.
மேற்கூறிய இரண்டும் பலனளிக்கவில்லை என்றாலும், அவை சருமத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. இந்த ஹேக் உண்மையில் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும், என்று தோல் மருத்துவர் கூறினார்.
எப்படி உபயோகிப்பது?
டிஸ்ப்ரின் மாத்திரையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சாலிசிலிக் அமில சீரம் பயன்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“