நமது பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணமாக பல நேரங்களில், நாம் உணவைத் தவிர்த்து விடுகிறோம். ஆனால் அப்படி செய்வது உங்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஒருவேளை நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தாலும், உணவைத் தவிர்ப்பது நல்ல யோசனையல்ல.
ஆரோக்கிய பயிற்சியாளரும், எழுத்தாளருமான டீன் பாண்டே உங்கள் உணவை ஏன் தவிர்க்கக்கூடாது என்பதை பகிர்ந்து கொண்டார். மேலும், உணவுப் பழக்கம் குறித்து ஒருவர் மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை அவர் பட்டியலிட்டார்.
“சில நேரங்களில் உடல் எடையைக் குறைப்பதற்கான எளிதான வழி உணவைத் தவிர்ப்பது போல் தெரிகிறது. ஆனால் அது நல்லதல்ல. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினாலும், அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க விரும்பினாலும், வழக்கமான சீரான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது” என்று பாண்டே கூறினார்.
உணவை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நிபுணர் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு:
* நீங்கள் உண்ணும் உணவு உங்களின் ஆற்றல் மட்டங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் உணவை தவிர்க்கும் போது’ இரத்த சர்க்கரை அளவு குறையும். சோர்வு ஏற்படுகிறது.
*உங்கள் வளர்சிதை மாற்றம் குறைகிறது.
*தேவையான ஊட்டச்சத்தை நீங்கள் இழக்கிறீர்கள்.
*உங்கள் சர்க்கரை பசி (sugar cravings) அதிகரிப்பதால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்.
*இது உங்கள் மனநிலை மற்றும் கவனத்தை பாதிக்கலாம் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும்.
*அஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும்.
*உணவைத் தவிர்ப்பது உங்கள் இரத்த அழுத்தத்தை பாதிக்கும்.

நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இங்கே
*ஒவ்வொரு நாளும் 4-5 வேளை சாப்பிடுங்கள், இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு மட்டுமல்லாமல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
* இரண்டு அடுத்தடுத்த உணவுகளுக்கு இடையிலான இடைவெளி’ நான்கு மணி நேரத்திற்கு மேல் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். இதை கடைபிடிக்க, ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள்.
*உங்கள் காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள், ஏனெனில் இது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகும்.
“இதற்குக் காரணம், காலையில் அன்றாடச் செயல்பாடுகளைச் செய்ய உங்கள் உடலுக்கு ஆற்றல் இல்லை. எனவே, காலையில் உங்கள் உடலை கிக்ஸ்டார்ட் செய்ய, நீங்கள் ஆரோக்கியமான காலை உணவை உண்ண வேண்டும்,” என்று பாண்டே கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“