sleep deprived, sleep loss, lack of sleep, sleep cycle, baby sleep, child sleep pattern, lack of sleep, indian express news
தூங்குவதில் குறைபாடு உள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் பின்னாளில் ஆட்டிசம் போன்ற குறைபாடு தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது. தூக்கக்குறைபாடு இல்லாதவர்களை விடவும், இந்த பிரச்னை இருப்பவர்களின் குழந்தைகளுக்கு அதிக வாய்ப்புள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
குழந்தையின் வளர்ச்சியில் முதல் 12 மாதங்கள் தூக்கக் குறைபாடு போன்றவை இருந்தால், அது ஆட்டிசம் குறைபாடாக கண்டறியவாய்ப்புள்ளது என்ற ஆராய்ச்சிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மேலும், இந்த தூக்கக்குறைபாடனது மூளையின் உட்பகுதியான ஹிப்போகாம்பஸின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். யுடபிள்யூ ஆட்டிசம் மையத்தின் இயக்குநர் அன்னெட் எஸ்டெஸ் என்பவர்தான் இந்த ஆராய்ச்சியின் மூத்த எழுத்தாளர் ஆவார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் என்பது கற்பதற்கும், நினைவுத்திறனுக்கும் முக்கியத்துவம்வாய்ந்த ஒன்றாகும். இந்த ஹிப்போகாம்பஸில் மாற்றம் என்பது 18 வயதுக்கு மேற்பட்டோரும் வயதான குழந்தைகளுக்கும் தூக்கக் குறைபாட்டை ஏற்படுத்துவதோடு தொடர்புடையதாகும். ஆட்டிசம் ஸ்பெக்டரம் கோளாறு கொண்ட 80 சதவிகித குழந்தைகள் தூக்கக் குறைபாடு உடையவர்களாவர்.
மனநலம் தொடர்பான அமெரிக்க பத்திரிகையில் இது குறித்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை உள்ள குழந்தைகளிடம் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். இந்த குழந்தைகள் பின்னாளில் ஆட்டிசம் இருப்பதாக கண்டறியப்பட்டபோது, தூக்கக் குறைபாடுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
எஸ்டெஸ் மேலும் கூறுகையில், “மாறுபட்ட தூக்க சுழற்சியானது, சில குழந்தைகளுக்கு பகுதி அளவிலோ அளவிலோ அல்லது மொத்தமாகவோ ஆட்டிசம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. நடந்தை தலையீடுகள் காரணமாக தூக்க சுழற்சி மேம்படுவது என்பது ஆட்டிசம் குறைபாடுகள் கொண்ட அனைத்து குழந்தைளிடமும் பிரதிபலிப்பதாக இல்லை. அவர்களின் பெற்றோர் எல்லாவற்றையும் சரியாகச் செய்தபோதும் அதில் மேம்பாடு ஏற்படவில்லை.”
தொடர்ந்து அவர் கூறுகையில், “ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு உயிரியல் கூறு காரணமாக தூக்கப் பிரச்னைகள் ஏற்படலாம் என்று தெரியவந்திருக்கிறது.” அதிக அபாயம் கொண்ட ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை, குறைந்த அபாயம் கொண்ட ஆட்டிசம் பாதித்த குழந்தைகளிடம் இருந்து சிறிது நேரம் விலக்கி வைக்கப்பட்டனர்.
அதேபோல ஆராய்ச்சி மேற்கொள்ளும்பட்சத்தில் அவர்களுக்கும் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ள குழந்தைகளில் மூன்றில் இரண்டு பகுதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் வியப்புக்கு உரிய விஷயம் என்னவென்றால், கேள்விக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளின் கூடப்பிறந்த வயதானவர்களுக்கு நோய் இருந்தது கண்டறியப்பட்டது.
432 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 127 பேர் குறைந்த அபாயம் கொண்டவர்களாக கண்டறியப்பட்டனர். இந்த குடும்பத்தைச்சேர்ந்தவர்களுக்கு இதற்கு முன்பு ஆட்டிசம் பாதிக்கப்பட்டதற்கான வரலாறு ஏதும் இல்லை. பின்னர், இரண்டு வயது ஆனபோது அந்த குழந்தைகளுக்கு நோய் கண்டறியப்பட்டது. பங்கேற்ற 300 பேரில் 71 பேருக்கு ஆரம்பத்தில் அதிக அபாயம் உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களாக அறியப்பட்டனர்.
தூக்க சுழற்சி குறைபாடு கொண்ட குழந்தைகள் என பெற்றோரால் கண்டறியப்பட்டவர்களுக்கு, இதர குழந்தைகளை விடவும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது . குழந்தைகளின் தூக்க சுழற்சி ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, பெரியவர்களைப் போலவே ஒரே மாதிரியாக நல்ல சுழற்சியை அவர்களுக்கு உண்டாக்கி அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் தூக்கக் குறைபாடுகள் ஆட்டிசம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறதா என்று முடிவான தீர்மானத்துக்கு வருவதற்கு மேலும் சில ஆராய்ச்சிகள், ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று எஸ்டெஸ் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil