நம் மனம் மற்றும் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு ஒரு நல்ல இரவு தூக்கத்தின் அவசியத்தை நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
தூக்கமின்மை உங்கள் நல்வாழ்வை கணிசமாக பாதிக்கும், மற்றும் இருதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு உங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. நீங்கள் போதுமான நேரம் தூங்குவதைத் தவிர, நீங்கள் தூங்கும் திசையிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆயுர்வேதத்தில் தூக்கம் மிகவும் இன்றியமையாதது – உணவு மற்றும் பாலியல் உடன் வாழ்க்கையின் மூன்று தூண்களில் ஒன்றாக இது சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பலர் நிம்மதியான தூக்கத்தைப் பெற போராடுகிறார்கள்.
வாழ்க்கை முறை காரணிகளை நாம் அடிக்கடி குற்றம் சாட்டினாலும், நாம் தூங்கும் திசையில் சிறிய கவனம் செலுத்த அறிவுறுத்தப் படுகிறது. இது நமது தூக்கத்தின் தரம் மற்றும் நமது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமாக, ஆயுர்வேத நூலான ஆனந்தகந்தா, ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க எந்த திசைகளில் தூங்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.
தூங்குவதற்கு சிறந்த திசை
ஆயுர்வேத நிபுணர் டிக்ஸா பவ்சர் சவலியாவின் கூற்றுப்படி ஆழ்ந்த, கனமான தூக்கத்தின் திசையாகக் கருதப்படுவதால், ஒருவர் தெற்கு நோக்கி தலை வைத்து தூங்க வேண்டும். தெற்கு எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், உங்கள் தலை நேர்மறையாக சார்ஜ் செய்யப்படுவதால், உங்கள் தலைக்கும் திசைக்கும் இடையே ஒரு இணக்கமான ஈர்ப்பு உருவாகும்.
நீங்கள் வடக்கு நோக்கி உங்கள் தலையை வைத்து தூங்கினால் ஆற்றல் வெளியே இழுக்கப்படுவதற்கு பதிலாக, உங்கள் உடலுக்குள் ஆற்றல் ஈர்க்கப்பட்டு ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்துகிறது. அதாவது தெற்கே தலை வைத்து கட்டை போல் தூங்க வேண்டும், என்று விளக்கினார்.
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்கள் தெற்கு திசையில் தலை வைத்து உறங்குமாறு அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு சிஸ்டாலிக் இரத்த அழுத்தம், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் சீரம் கார்டிசோல் ஆகியவை மிகக் குறைந்தது கண்டறியப்பட்டது.
மோசமான திசை எது?
உறங்குவதற்குத் தெற்கே சிறந்த திசையாகக் கருதப்படுவது போல, ஆயுர்வேத வல்லுநர்கள் தூங்கும் போது வடக்கு நோக்கி இருப்பதைத் தவிர்க்க பரிந்துரைக்கின்றனர்.
வடக்கு நோக்கி உறங்குவதால் பூமியின் நேர் துருவமானது, நமது உடலின் நேர் துருவத்துடன் ஒத்துப்போகிறது, இது ஒன்றையொன்று விரட்டுகிறது.
இந்த திசையில், உங்களுக்கு நிம்மதியான இரவு தூக்கம் வராது, இதனால் சோர்வுடன் எழுவீர்கள். இது, ஆயுர்வேத ரீதியாக, ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, மன அழுத்தம் மற்றும் மனதை தொந்தரவு செய்கிறது, என்று மருத்துவர் டிக்ஸா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.