தூக்கமின்மை உங்கள் நல்வாழ்வை கணிசமாக பாதிக்கும், மற்றும் இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு உங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.
Advertisment
7-8 மணிநேரம் தரமான தூக்கம் நமது நல்வாழ்வுக்கு மிகவும் அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நீங்கள் உறங்கும் நிலையும் மிகவும் முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம் – காலை எழுந்தவுடன் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்பதையும் இது தீர்மானிக்கிறது.
ஒரு நல்ல இரவு தூக்கத்துடன், புத்துணர்ச்சியான காலை வேளைக்கு நீங்கள் எப்படி தூங்க வேண்டும்? நேராக அல்லது குப்புறப்படுத்து அல்லது பக்கவாட்டில் தூங்குவதா?
அமெரிக்க டாக்டர் கானிதா சுவர்ணசுத்தி ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் குப்புறப்படுத்து தூங்குவதால் உடலில் ஏற்படும் தாக்கத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். இது ஒரு நல்ல பழக்கமா?
Advertisment
Advertisements
குப்புற படுப்பது முதுகுத்தண்டில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, மேலும், உங்கள் முதுகுத்தண்டை நடுநிலையாக வைத்திருக்க உதவும் ஒரு படுக்கை இல்லாவிட்டால் உங்களால் சரியாக முகத்தை வைக்க முடியாது. அதனால், இரவு முழுவதும் கழுத்தை திருப்பிக் கொண்டிருப்பீர்கள், இது எதிர்காலத்தில் கழுத்து வலிக்கு வழிவகுக்கும் என்று அந்த வீடியோவில் அவர் கூறினார்.
புத்துணர்ச்சியான காலை வேளைக்கு நீங்கள் எப்படி தூங்க வேண்டும்
டாக்டர் ஜாய்தீப் கோஷ் கருத்துப்படி, குப்புற படுத்து தூங்கும்போது, ஒருவரின் உடலின் மையத்தில் அதிகபட்ச எடை இருக்கும். இது நீங்கள் தூங்கும் போது முதுகெலும்பு ஒரு நிலையில் இருப்பதை கடினமாக்குகிறது. முதுகெலும்பில் உள்ள அழுத்தம் உங்கள் உடலின் பல்வேறு அமைப்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
மேலும் குப்புற படுத்து தூங்குவது, கழுத்தின் நிலையை சீர்குலைக்கும், நீங்கள் கழுத்தை திருப்பும் நிலை, உங்கள் தலை மற்றும் முதுகெலும்பை சீரமைக்காமல் வைக்கிறது. குப்புறப் படுத்து தூங்குவதால் ஏற்படும் தீங்கைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பழக்கம், கழுத்து பிரச்சினைகள் உருவாகலாம், என்று கோஷ் குறிப்பிட்டார்.
இருப்பினும், நீங்கள் இன்னும் குப்புறப் படுத்து தூங்க விரும்பினால், கானிதா ஒரு உறுதியான மெத்தையைப் பயன்படுத்தி உங்கள் இடுப்புக்கு கீழ் ஒரு தலையணையை வைக்க பரிந்துரைக்கிறார். ஆனாலும் முதுகெலும்பை நடுநிலையாக வைத்திருக்க வலது பக்கமாக அல்லது நேராக தூங்குவது நல்லது, என்று அவர் வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“