Advertisment

உங்கள் துணை அருகில் இருக்கும்போது நீங்கள் ஏன் நன்றாக தூங்குகிறீர்கள்?

அன்பான உறவு ஒரு சிறந்த தூக்க சுழற்சிக்கு வழிவகுக்கும், என்று டாக்டர் டில்வே கூறினார்.

author-image
WebDesk
Jun 05, 2023 12:10 IST
New Update
lifestyle

Science behind better sleep next to partner

உங்கள் துணையின் அருகில் இருக்கும்போது நீங்கள் சீக்கிரம் தூங்குவதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?ஆனால் அதற்கு பின்னால் அறிவியல் இருக்கிறது.

Advertisment

ஒரு அன்பான துணை அருகில் இருக்கும் போது நாம் ஏன் நன்றாக தூங்க முடிகிறது என்ற விவரங்களை ஊட்டச்சத்து நிபுணர் ரூபியோ ஃபுர்டே பகிர்ந்து கொண்டார்.

உங்கள் நீண்ட கால துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவது உங்கள் மனதிலும் உடலிலும் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்தும் என்ற கருத்தை ஆராய்ச்சி ஆதரிக்கிறது.

நீங்கள் உங்கள் காதலியின் அருகில் இருக்கும்போது, ​​'ஃபீல்-குட்' ரசாயனங்கள் எனப்படும் ஆக்ஸிடாஸின் மற்றும் செரோடோனின் வெளியீடு, தளர்வான, ஒரு மனநிறைவு நிலையைத் தூண்டுகிறது.

உணர்ச்சிப் பிணைப்புகளை வளர்ப்பதிலும், மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் இந்த ரசாயனங்களின் ஆற்றலை பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. கூடுதலாக, ஆக்ஸிடாஸின், பெரும்பாலும் 'காதல் ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது, இது நம்பிக்கையுடன் தொடர்புடையது என்று ரூபியோ கூறினார்.

ஆனால், இதைப் பற்றி எங்களுக்குப் பல சந்தேகங்கள் இருந்ததால், இதைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள மனநல மருத்துவர் கேதார் டில்வே, அணுகினோம். அவர் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தூக்கம் என்பது ஒரு உடலியல் செயல்முறையாகும், இது சில உடல் செயல்முறைகளை மறுசீரமைக்க உதவுகிறது மற்றும் புத்துணர்ச்சியூட்டுகிறது. நாம் இயற்கையாகவே பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலில் நன்றாக தூங்குவோம். எனவே, உங்கள் துணையின் இருப்பு உங்களை நன்றாக தூங்க வைக்கும்.

அன்பான உறவு ஒரு சிறந்த தூக்க சுழற்சிக்கு வழிவகுக்கும், என்று டாக்டர் டில்வே கூறினார்.

நமது துணைக்கு அருகில் நாம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதே இதற்குக் காரணம், இது ஆக்ஸிடாசின் அல்லது காதல் ஹார்மோனை வெளியிடுவதற்கும் வழிவகுக்கிறது. ஆனால், அதற்கான சரியான சூழலை உருவாக்குவதற்கு உங்கள் துணை மீது நீங்கள் வைத்திருக்கும் பாதுகாப்பான உணர்வும் நம்பிக்கையும் அவசியம்.

உங்களுக்கு அருகில் உள்ள நபருடன் அமைதியாகவும், அக்கறையுடனும், பாதுகாப்பாகவும் உணர்வது உங்களை நிதானமாகவும், அதிக விழிப்புணர்வைக் குறைக்கவும் அனுமதிக்கிறது. இது உங்கள் செரோடோனெர்ஜிக், டோபமினெர்ஜிக் மற்றும் அட்ரினெர்ஜிக் ஏற்பி அமைப்புகளின் சிறந்த ஒழுங்குமுறையை உறுதிசெய்கிறது, இது சிறந்த தூக்கத்தை ஏற்படுத்தும், என்று அவர் கூறினார்.

publive-image

அன்பான மற்றும் நம்பகமான உறவின் ஆரோக்கிய நன்மைகள்

இதில் உங்களுக்கு நல்ல தூக்கம் மட்டும் கிடைப்பதில்லை, அன்பான மற்றும் நம்பிக்கையான துணை உடல் மற்றும் மனரீதியாக.பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

டாக்டர் டில்வேயின் கூற்றுப்படி, ஆரோக்கியமான காதல் உறவு உங்கள் மன ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான ஒரு நல்ல  காரணியாகும்.

எந்தவொரு சூழ்நிலையையும் சிறப்பாகச் சமாளிக்கும் ஒரு நிலையான ஆதரவு அமைப்பை இது அனுமதிக்கிறது. இது சிறந்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையது, ஏனெனில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க ஒருவரையொருவர் ஊக்குவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான வாழ்க்கை முறை நோய்களைக் கையாளும் போது இது நன்மை பயக்கும், என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment