’என்றும் பதினாறு’ என்பது அனைவரின் விருப்பமாகவே உள்ளது. முகம்தான் நம் அழகையும் இளமையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் முக்கிய அடையாளம். அந்த முகத்தைத்தான் முதலில் பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள்.
அந்த முகம் அழகாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு பல பெண்கள் ஆன்டி ஏஜிங் க்ரீம்கள், ஊசிகள், சில வகையான பார்லர் சர்ஜரிகள் போன்றவை எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், உண்மையில் நாம் உண்னும் உணவை முறையாகவும், சரியானதாகவும் எடுத்துக் கொண்டாலே இளமை என்பது எப்போதுமே நமக்கே சொந்தமாகும்.
இதோ ஏஜிங்கை விரட்டி அடிக்கும் உணவு பட்டியல்கள்!
1. தக்காளி:
பெண்களின் ஏஜிங் பிரச்சனையை போக்குவதில் தக்காளி பெரும் பங்காற்றுகிறது. நுரையீரல் புற்றுநோய் வராமலும் தடுக்கும். தக்காளியை வேக வைத்து உணவில் சேர்த்தால் அதில் இருக்கும் லைகோபைன் முகத்திற்கு பொலிவான தோற்றத்தை தருகிறது.
2. நார்ச்சத்து உணவுகள்:
இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளும் உணவுகளில் நார்ச்சத்து உணவுகள் முதலிடம் வகிக்கின்றன. முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை உடல் நலத்தை மேம்படுத்துகின்றன. உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால், இளமை தோற்றம் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்.
3. நட்ஸ்:
நட்ஸில் இருக்கும் நார்ச்சத்து, புரோட்டீன், ஒமேகா-3, அன்சாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை, சரும செல்கள் ஆரோக்கியமாகி, சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, நீண்ட நாட்கள் இளமையுடனும் இருக்கவும் உதவுகின்றன.
4.தண்ணீர்:
உடல் அழகு மற்றும் இளமை தோற்றத்திற்கு தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. எவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்கின்றோமா, அந்த அளவிற்கு சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, இளமை தக்க வைக்கப்படும். உடல் சூடு குறைந்து முகத்தில் தோன்றும் சிறு சிறு பருக்கள் அறவே நீங்கும்.
5. ரெட் ஒயின்:
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே விஷம் என்பார்கள். அது போல் தான் ரெட் ஒயினும். தினமும்1 ஸ்பூன் குடிதால் ரெட் ஒயின் இளமை, அழகு, கவர்ச்சியான தோற்றம் என அனைத்தையும் தரும். இளமையாக இருக்க நினைத்தால், ரெட் ஒயினை அளவாக குடியுங்கள்.
ஆரோக்கியமான சமச்சீரான உணவு மற்றும் , உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என் இவை எல்லாவற்றையும் தாண்டி தூக்கம் என்பதும் என்றுமே, நமது முகத்தோற்றத்தை இளமையாக வைத்திருக்க உதவும் என்பதை என்றென்றும் நினைவில்கொள்ளவும்.