Advertisment

வாயில் எச்சில் ஊறும் சுவையில்: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் சின்ன வெங்காய பணியாரம் ரெசிபி

மாதம்பட்டி ரங்கராஜ் புதிதாக சவை உணவுக்கு என திறந்து உள்ள கிளவுட் கிட்டனில், இந்த வெங்காயம் பணியாரம் டிஷ் செய்யப்படுகிறது. அதன் ரெசிபி இதோ.

author-image
WebDesk
New Update
sasa

மாதம்பட்டி ரங்கராஜ் புதிதாக சவை உணவுக்கு என திறந்து உள்ள கிளவுட் கிட்டனில், இந்த வெங்காயம் பணியாரம் டிஷ் செய்யப்படுகிறது. அதன் ரெசிபி இதோ. 

தேவையான பொருட்கள் 

1 கப் பச்சரிசி 

1 இட்லி அரிசி 

உளுந்து முக்கால் கப் 

அரை ஸ்பூன் வெந்தயம்

உப்பு  

3 ஸ்பூன் எண்ணெய் 

25 சின்ன வெங்காயம் 

1 ஸ்பூன் கடலை பருப்பு 

1 ஸ்பூன் சீரகம் 

அரை ஸ்பூன் உளுந்து

1 கையளவு நறுக்கிய கொத்தமல்லி இலை 

செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி, வெந்தயத்தை நன்றாக கழிவி 4 மணி நேரம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இட்லி மாவு பதத்திற்கு அரைத்துகொண்டு 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சீரகம், கடுகு, கடலை பருப்பு, சின்ன வெங்காயம் நறுக்கியது, உளுந்து, சேர்த்து நன்றாக வதக்கவும். இதை மாவில் சேர்த்து, உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலை சேர்த்து கிளரவும். வழக்கம்போல், பணியாரம் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து இதை ஊற்றி பொறித்து எடுக்கவும்.  

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment