ஒரு முறை வெங்கடேஷ் பட் சொன்ன மாதிரி சின்ன உருளைக்கிழங்கு வறுவல், வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
சின்ன உருளைக்கிழங்கு அரை கிலோ
மஞ்சள் கொஞ்சம்
உப்பு
1 ஸ்பூன் மிளகு
3 ஸ்பூன் உளுந்து
7 காஷ்மீரி வத்தல்
1 அரை ஸ்பூன் சோம்பு
நல்லெண்ணை 8 ஸ்பூன்
4 வத்தல்
1 ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் பெருங்காயம்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் மிளகு, உளுந்து, வத்தலை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை நன்றாக மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். உளுக்கிழங்கை மஞ்சள் பொடி, உப்புப் சேர்த்து வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சோம்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதையும் அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும், தொடர்ந்து வத்தல், கடுகு, உளுளைக்கிழங்கை சேர்க்கவும். இதை நன்றாக வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைக்கவும். மீண்டும் சிறுது எண்ணெய் சேர்த்து அதில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, உருளைக்கிழங்கை சேர்த்து அதில் அரைத்த மசாலா பொடி, சோம்பு பொடி, காயப் பொடி சேர்த்து கிளரவும். உப்பு சேத்து கொள்ளவும்.