பயணங்கள்தான் நம்மை முழு மனிதனாக்கும். பல அனுபவங்களை கற்றுத்தரும். அப்படிப்பட்ட பயணங்களை எளிமையாக்க இன்று பல மொபைல் ஆப்கள் இருக்கின்றன. அத்தகைய ஆப்கள் இருந்தால், நாம் எங்கு செல்ல வேண்டும், எங்கு தங்கலாம், நல்ல உணவு கிடைக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களை நம் விரல் நுனியில் பெறலாம். அப்படிப்பட்ட சில மொபைல் ஆப்கள் சிலவற்றை காணலாம்.
1. Trip n howl:
நமக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் சேர்ந்து பயணம் மேற்கொள்ளுதல், பயண திட்டங்கள், பயண தருணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள இந்த ஆப் உதவுகிறது.
2. Zomato:
பயணம் மேற்கொள்ளும் இடங்களில் நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் ரெஸ்டாரண்டுகளை தேர்ந்தெடுக்க இந்த ஆப் பயனுள்ளதாக அமைகிறது.
3. OYO
இந்தியாவின் 230 நகரங்களில் உள்ள 8,500 ஓட்டல்கள் குறித்த தகவல்களை இந்த ஆப் மூலம் பெற முடியும்.
4. Saavn
பயணத்தின்போது நீங்கள் கொஞ்சம் சோர்வானால், ஆங்கிலம், பாலிவுட் உள்ளிட்ட இந்திய திரையிசை பாடல்களை கேட்டு மகிழலாம்.
5. Uber
உபேர் டாக்ஸி சேவை பயணங்களை உங்கள் பட்ஜெட்டுக்குள் எளிதாக்கும்.