ஸ்மார்ட்ஃபோனை அதிகம் உபயோகித்தால் மகிழ்ச்சி குறையும்: ஆய்வில் தகவல்

ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்கள், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்கள், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என அராய்ச்சியொன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் லட்சக்கணக்கான பதின்பருவ வயதுடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்களிடம், மொபைல், டேப்லெட், கணினி ஆகியவற்றில் செலவிடும் நேரம் , சமூக வலைத்தளங்களில் எவ்வளவு செலவிடும் நேரம், அவர்களின் மகிழ்ச்சி மனநிலை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அதன்மூலம் கணினிகளில் கேம்ஸ் விளையாடுபவர்கள், மெசேஜ், வீடியோ சாட்டிங் செய்பவர்கள், ஆகியோர், விளையாட்டு, செய்தித்தாள், இதழ்கள் வாசிப்பவர்கள், நேருக்கு நேர் உரையாடுபவர்களைவிட மகிழ்ச்சி குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இவர்களைவிட ஒருநாளைக்கு ஒருமணிநேரம் குறைவாக இந்த சாதனங்களை பயன்படுத்துவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close