மணம் வீசும் மரிக்கொழுந்து… பொடுகு தொல்லை நீங்க இப்படி யூஸ் பண்ணுங்க; டாக்டர் நித்யா
தலையில் ஏற்படக்கூடிய பொடுகு பிரச்சனை எப்படி சரி செய்யலாம்? முடி உதிர்தல் பிரச்னையை இயற்கை பொருட்கள் கொண்டு எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி மருத்துவர் நித்யா கூறுகிறார்.
தலையில் ஏற்படக்கூடிய பொடுகு பிரச்சனை எப்படி சரி செய்யலாம்? முடி உதிர்தல் பிரச்னையை இயற்கை பொருட்கள் கொண்டு எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி மருத்துவர் நித்யா கூறுகிறார்.
மணம் வீசும் மரிக்கொழுந்து… பொடுகு தொல்லை நீங்க இப்படி யூஸ் பண்ணுங்க; டாக்டர் நித்யா
பொடுகு பிரச்சனை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகு ஏன் வருகிறது. பொடுகு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள், மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதை தான் நாம் பொடுகு என்கிறோம்.கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளைப் பற்றி நித்யாஸ் வரம் என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் நித்யா கூறுகிறார்.
பொடுகு ஏன் வருகிறது?
வறட்சியான சருமம், அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது. தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வருகிறது. அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினாலும் வரலாம்.
Advertisment
பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரம் 3 முறை தலைக்கு குளிப்பது, உணவு முறையிலும் கவனம் வேண்டும். கெமிக்கல்ஸ் இருக்கக்கூடிய ஷாம்புல்ஸ் பயன்படுத்தும்போது கொஞ்ச நாள் சரியாகும். ஆனால், மறுபடியும் பொடுகு பிரச்னை வரும். அதனுடன், தலைமுடி உதிர்தல் பிரச்னையும் ஏற்படும் என்கிறார் மருத்துவர் நித்யா.
கெமிக்கல்ஸ் நமது தலையின் ஸ்கேல்ப்பில் படிய ஆரம்பித்து, தலைமுடியின் வேர்ப்பகுதியில் படிகிறது. இதனால், அதிகப்படியான முடி உதிர்தல் ஏற்படும். சித்த மருத்துவத்தில் பொடுகு தொல்லை நீங்க எளிய வழிமுறைகள் உள்ளன. அதில், ஒன்று மரிக்கொழுந்து ஹேர் பேக்.
செய்முறை:
Advertisment
Advertisements
நறுமணம் வீசக்கூடிய மரிக்கொழுந்து இலைகள், வல்லாரை இலைகள் ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து ஹேர்பேக் போல தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பயன்படுத்தலாம். பூஞ்சைத் தொற்று இருந்தாலும் மரிக்கொழுந்து சாறு பயன்படுத்திக்கலாம். இந்த ஹேர்பேக் பயன்படுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாக தலையில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்னை, அதிகமான தலைமுடி உதிர்தல் குணமாகிறது என்கிறார் மருத்துவர் நித்யா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.