மன அமைதி வேண்டுமா அப்ப ’பாம்பு மசாஜ்’ட்ரை பண்னி பாருங்க....

மன அமைதி வேண்டுமா அப்ப ’பாம்பு மசாஜ்’ட்ரை பண்னி பாருங்க….

மன அமைதி பெற பாம்பு மசாஜ் என்ற புதிய வைத்தியம் தற்போது அதிக நபர்களால் மேற்கொள்ளப்படுகிறது அதுப்பற்றி உங்களுக்கு தெரியுமா?

வெளிநாட்டு பாரம்பரியங்களில் ஒன்றான மசாஜ் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. முன்பெல்லாம் பணக்காரர்கள் ” ரொம்ப டெண்ஷனா இருக்கு அதை ரீலாக்ஸ் பண்ண ஃபாரீன் ட்ரப் போட்யிட்டு வந்தேன். மசாஜ் பண்ண இப்ப நல்ல இருக்கு” என்று நண்பர்களிடம் சொல்வது வழக்கம்.

இதை கேட்கும் பலருக்கும் மசாஜ் என்றால் அப்படி, இப்படினு ஏகப்பட்ட எண்ணங்கள், கற்பனைகள் தோன்றும். அதைப் போல் சிலருக்கு மசாஜ் என்றாலே அது பெண்கள் தான் செய்வார்கள் என்ற எண்ணமும் உண்டு. ஆனால் உண்மையில் மசாஜ் என்பது கைதேர்ந்த வல்லுநர்களால் செய்யப்படுவது.

மசாஜ் செய்வதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சியடையும், மனஅழுத்தம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பார்கள். வசதிகேற்ப அவரவர்கள் தகுந்த மசாஜ்களை செய்துக் கொள்ளலாம். ஆயில் மசாஜ், மில்க் மசாஜ், நத்தை மசாஜ் என பிரசித்தி பெற்ற மசாஜ்கள் வரவேற்பு பெற்றவை.கோலிவுட் தொடங்கி பாலிவுட் நடிகைகல் கூட அடிக்கடி மசாஜ் செய்து கொள்வதாக கூறி இருக்கின்றனர். கேரளாவில் இதற்காகவே பல இடங்கள் உள்ளன. இந்நிலையில் தான் தற்போது பாம்பு மசாஜ் என்ற புதுவிதமான மசாஜ் ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது.

இஸ்ரேலில் வழங்கப்படும் மசாஜ், வேறு எங்குமே கேள்விப்பட்டிராதது. அமேசான் காடுகளில் பிடிக்கப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்ட பாம்புகளைக் கொண்டு அங்கு மசாஜ் செய்கிறார்கள். புல்லரிக்கும் மசாஜ் பாம்புகளை மனிதனின் முதுகுப்பகுதி, தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, கால் போன்றவற்றில் ஊறவிட்டு, ஒருவிதமான புல்லரிக்கும் மசாஜ் இங்கே அளிக்கப்படுகிறது.

குறிப்பாக பெண்களை இந்த மசாஜ்கள் வெகுவாக கவர்ந்துள்ளன.  அதிகம் பயிற்சி அளிக்கப்பட்ட மலைப்பாம்புகள், வெள்ளை நாகங்கள்,  உடலின் மேல் விடப்படுகின்றன. அவைகள்கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கழுத்து, காது, கால்கள் என எல்லா பகுதிக்கும் சென்று  தழுவுகின்றன.

பாம்பு ஊர்ந்து செல்லும் இடமெங்கும் ரத்த ஓட்டம் அதிகரித்து உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தருகிறதாம். கட்டணம் அதிகமில்லை இந்த மசாஜ் சேவைக்கு 80 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

×Close
×Close