சினேகா வாழ்க்கையில் இது அடுத்த அத்தியாயம்! 2 ஆவது குழந்தைக்கு அம்மாவான கொண்டாட்ட ஃபோட்டோஸ்

13 வருடங்களுக்கு பிறகு புதுப்பேட்டை 2-லும் சினேகா ஒப்பந்தமானார்.

sneha baby shower : புன்னகை அரசி சினேகாவுக்கு சமீபத்தில் வளைக்காப்பு நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருக்கும் சினேகாவின் கலர்ஃபுல் பேபி ஷவர் ஃபோட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்ற பெயருக்கு சொந்தக்காரியான சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டாப் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார். ஹோம்லியாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரச்சன்னாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களின் ஜோடி பொருத்தம் ஊரே வியந்து பேசும் அளவிற்கு இருந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்த சினேகா முதலில் கருவுற்றப்பின்பு ஒட்டு மொத்தமாக சினமாவிற்கு முடக்கு போட்டார். பின்பு சினேகா- பிரசன்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு பிறகு சின்ன இடைவெளி எடுத்துக் கொண்டு சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் அடிக்க ரெடியானார் சினேகா.

சின்னத்திரை, விருது நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் அனைத்திலும் சினேகா முகம் தென்ப்பட ஆரம்பித்தது. 13 வருடங்களுக்கு பிறகு புதுப்பேட்டை 2-லும் சினேகா ஒப்பந்தமானார்.

இந்நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக, தங்களது வீட்டில் அடுத்த குழந்தை சத்தம் கேட்க இருப்பதாக நடிகர் பிரச்சன்னா கூறியிருந்தார். அதன்படி இரண்டாவது முறையாக தாயாகியுள்ள சினேகாவுக்கு முறைப்படி பாரம்பரிய சீமந்தம் மிகவும் சிம்பிளாக சமீபத்தில் நடந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close