ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட சினேகா – பிரசன்னா ஜோடி! காதல் டூ கல்யாணம் ஸ்பெஷல் கேலரி

சூர்யா - ஜோதிகாவுக்கு பிறகு ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஜோடியாக இந்த ஜோடி மாறியது

By: Updated: September 30, 2019, 11:55:39 AM

sneha movies : தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்றவுடன் கே. ஆர் விஜயாவிற்கு பிறகு நம் நினைவில் வரும் முகம் சினேகாவுடையது தான். 2000 ஆம் ஆண்டில் “என்னவளே” படம் மூலம் சினேகாவின் முகம் கோலிவுட்டில் தெரிந்தது. ஆனால் சினேகாவின் அறிமுக படம் என்றால் அது பிரசாந்துடன் இணைந்து நடித்த விரும்புகிறேன் தான்.

ஹோம்லி லுக்கில் கலக்கிய சினேகா ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் சினேகாவும் ஒருவர். துணிக்கடை விளம்பரம், நகைக்கடை விளம்பரம், ஃபோட்டோ ஸ்டியோவில் கூட சினேகா புகைப்படம் தான். அதற்கு காரணமே சினேகாவின் சிரிப்பு தான்.

சினேகாவுக்கு ராசியான நடிகை என்ற சிறப்பு பெயரும் உண்டு. அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு படங்களிலும் முன்னணி நாயகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார் சினேகா. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பிரச்சன்னாவை கரம் பிடித்தார். சூர்யா – ஜோதிகாவுக்கு பிறகு ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஜோடியாக இந்த ஜோடி மாறியது. சினேகா பிரச்சன்னா காதல் டூ கல்யாணம் ஸ்பெஷல் கேலரியை இங்கே பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து 5 நாட்கள் சினேகார் – பிரசன்னா திருமணம் நடைப்பெற்றது. இந்து முறையில் நடைப்பெற்ற இவர்களது திருமணத்தில் ஆடல், பாடல் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. தமிழ் சினிமாவின் அனைத்து நட்சத்திரங்களும் இவர்களது திருமணத்தில் கலந்துக் கொண்டு ஜோடிகளை வாழ்த்தினர்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சினேகாவை மீண்டும் அவரின் வளைக்காப்பு ஃபோட்டோவில் தான் பார்க்க முடிந்தது.

 

2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். இதற்கு பின் மீண்டும் சினேகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதில், வேலைக்காரன் படம் சொல்லிக் கொள்ளும்படி அமைந்தது. தற்போது மீண்டும் சினேகா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Sneha movies sneha photos sneha videos sneha news sneha biography sneha birthday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X