‘snowmanning’, the new winter dating term - அதென்ன பனிமனிதமயம்? - குளிர்காலத்துக்கான புது டேட்டிங்!
குளிர்காலமானது சிலருக்கு கடுமையாக இருக்கும்; சிலருக்கு சகிப்புத்தன்மையை உண்டாக்கும். மட்டுமின்றி, மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் கொண்டுவந்து சேர்க்கும். இந்த காலகட்டத்தில், முதலில் கிறிஸ்துமஸ், அதைத் தொடர்ந்து புத்தாண்டு என ஒரே உற்சாகம்தான். மக்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் சந்தித்து அளவளாவுவது, ஒன்றுகூடுவது, கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது போன்ற இப்படியான தேவைப்படுகின்ற திளைப்பும் புத்தாண்டுத் தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்கான முனைப்புமாக இருக்கும் காலகட்டமாகும். காதல் வழியப் பேசுவது, புதியவர்களைச் சந்திப்பது, உடனடி ஈர்ப்பை உணர்ந்துகொள்வது, அவர்களுக்கிடையிலான வேதிமாற்றத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றுக்கான காலமும்கூட.
Advertisment
கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
இதில் நெஞ்சைப்பிழியும் மிக அண்மைய டேட்டிங் பேச்சு என்னவென்றால், பனிமனிதமயம் என்பதே! அதாவது, 1982-ம் ஆண்டு வெளியான ஸ்னோமேன் (பனிமனிதன்) படத்தில் உள்ள ஒரு சிறுவன், அவனுடைய கற்பனையான பனி மனிதனுடன் துருவப்பகுதிக்குச் சென்று விளையாடி மகிழ்கிறான்; காலையில் சூரியன் வந்ததும் அந்தப் பனிமனிதன் உருகி அந்தச் சிறுவனின் நினைவில் மட்டுமே இருப்பதாக ஆகிவிடுறது. அதைப் போலவே ஆண்டு இறுதிக் கொண்டாட்டம் முடிந்தவுடன், பேய் பிடித்தவரின் நடத்தையை இத்துடன் ஒப்பிட்டுச் சொல்வதும் அதை நிராகரிப்பதுமாக இருக்கிறது.
உண்மையிலேயே அது ஏன் நெஞ்சைப்பிழியக்கூடியது என்றால், சில பொருள்கள் மறைந்துபோய் அர்த்தமுள்ள புதியவையாக மலரும் என எதிர்பார்த்தபடி இருப்பவர்கள், உண்மையை அறியாமல் இருப்பதுதான். அருமையான கிறிஸ்துமஸ் திரைப்படங்கள், புத்தாண்டு, புது வாழ்க்கைக்கான தீர்மானங்கள் எல்லாவற்றையும் திட்டித்தீர்ப்பதாக ஆகிவிடும்..கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் தனியர்கள் பலரும் பனிமனிதனைப்போல ஆகிவிடுவதாக அதிக டேட்டிங் விற்பன்னர்கள் நம்புகிறார்கள். உண்மையில், இ ஹார்மனி எனும் டேட்டிங் இணையதளம் கூறுவதன்படி, கொண்டாட்டத்தை உண்டாக்குபவர்களில் 16 விழுக்காட்டினர் இந்தக் காலகட்டத்தில்தான் மற்றவர்கள் அதிகமான கவர்ச்சிகரமாக இருக்கின்றனர் என்கிறார்கள். நிறைய தனியர்களும் ஆண்டின் இந்தக் காலகட்டத்தில் தனியாக இருக்கக்கூடாது என தங்களுக்குத் தோன்றுவதாகவே கூறுகின்றனர்.
விழா மகிழ்ச்சியில் துய்ப்பவர்களில் 53 விழுக்காட்டினர் பனிமனிதமயம் ஆக்கப்படுவதாகத் தெரிவிக்கிறார்கள்; இந்த சமயத்தில் ஒரு குறுகியகாலக் காதலே கிடைப்பதாக ஆண்கள் கூறுகின்றனர் என்றும் அந்த இணையதளம் தெரிவிக்கிறது.
தமிழில் –இர.இரா.தமிழ்க்கனல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news