இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் சக்தி எல்லாம் செலவாகிவிடும். இதனால் உங்களுக்கு சோர்வு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். இந்நிலையில் இந்த உணவுகளை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இனிப்பு அதிகம் உள்ள ஸ்நாக்ஸ் மற்றும் குளிர் சாதனப் பானங்கள் நமக்கு உனடியாக சக்தியை கொடுப்பது போல் தெரிந்தாலும், சீக்கிரத்தில் சக்தி குறைந்து, சோர்வு ஏற்படும். மேலும் இன்சுலின் அளவு அதிகரிக்கும். இதனால் உடல் சோர்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவில் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்பு சத்து மற்றும் பதப்படுத்துவதற்கு பயன்படும் கெமிக்கல் கலந்த பொருட்கள் பயன்படுத்தப்படும். இதனால் நீங்கள் மந்தமாக மாறிவிடுவீர்கள். அடுத்த வேலை செய்வதற்கே மிக மெதுவாகத்தான் செயல்படுவீர்கள்.
செயற்கை இனிப்பூட்டிகள், பதப்படுத்தப்படும் கெமிக்கல் கலந்த பொருட்கள் மனச் சோர்வைகூட ஏற்படுத்தலாம். அதிகம் பொறித்த உணவுகள் இவையும் உங்கள் சக்தியை குடித்துவிடும். இதில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்பு சத்து, இதய ரத்த குழாய்களை குறுகலாக்கி, செல்களுக்கு தேவையான ஆக்லிஜனை குறைவாக கொடுக்கும். மேலும் அதிகம் பொறித்த உணவுகள் செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் சோம்பல் ஏற்படும்.
காஃப்பைன் கலந்த பானங்கள் உடனடியாக புத்துணர்வை தரலாம். ஆனால் இதை நாம் அடிக்கடி குடிக்கும்போது, தூக்கத்தை பாதிக்கும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள், கடும் சோர்வை ஏற்படுத்தும். இதுபோல காஃபைன் கலந்த உணவுகளை எடுத்துகொள்ளும் போது, வரட்சி ஏற்படுத்தமால் இருக்க தண்ணீர் பருக வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“