Advertisment

நீங்க குளிக்கிற சோப்புல இது அதிகமா இருக்கா செக் பண்ணுங்க: தோல் மருத்துவர் சொல்வது என்ன?

சோப், நமது தினசரி சுகாதாரத்தின் முக்கிய பகுதியாகும், ஏனெனில் முழுமையான சுத்தத்திற்கு தண்ணீர் மட்டும் போதாது. ஆனால் உங்கள் சோப்பில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?

author-image
WebDesk
New Update
Soap bar

Find out what ‘TFM’ in your soap means

சோப், நமது தினசரி சுகாதாரத்தின் முக்கிய பகுதியாகும், ஏனெனில் முழுமையான சுத்தத்திற்கு தண்ணீர் மட்டும் போதாது. ஆனால் உங்கள் சோப்பில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?

Advertisment

பொதுவாக, சோப்பில் உள்ள TFM (Total Fatty Material) அவற்றின் தரத்தை அளவிட உதவுகிறது.

சோப்பில் உள்ள கொழுப்புப் பொருள் பொதுவாக பால்மிடிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலிக் அமிலம் மற்றும் சோடியம் ஓலேட் போன்ற பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. சோப்பின் செயல்திறனைப் புரிந்துகொள்வதில் TFM ஒரு முக்கியமான காரணியாகும். பொதுவாக, அதிகளவு TFM கொண்ட சோப் மேம்பட்ட சுத்திகரிப்பு பண்புகளுடன் தரமானதாகக் கருதப்படுகின்றன, என்று டாக்டர் ரிங்கி கபூர் கூறினார். (consultant dermatologist, cosmetic dermatologist and dermato-surgeon, The Esthetic Clinics)

அதிக TFM கொண்ட சோப்பு, முக்கியமாக அதிக PH அளவு மற்றும் வலுவான சுத்திகரிப்பு பண்புகள் கொண்ட பாமாயிலில் தயாரிக்கப்படுகிறது. சோப்பின் அதிக PH அளவு காரணமாக சிலருக்கு தோல் வறண்டு போகக்கூடும். மறுபுறம், சிண்டெட் சோப்  (Syndet soaps), ஒப்பீட்டளவில் குறைந்த TFM மற்றும் PH அளவுகளுடன் சிந்தெட்டிக் சர்பாக்டான்ட் (synthetic surfactants) கலவையுடன் தயாரிக்கப்படுகின்றன, இது சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.

சிண்டெட் சோப் பெரும்பாலும் ‘soap-free bars’ அல்லது டெர்மட்டாலஜிக்கல் பார்என விற்பனை செய்யப்படுகின்றன, மேலும் அவை உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட பரிந்துரைக்கப்படுகிறது. என்று டாக்டர் கபூர் கூறினார்.

சோப் பார்களில் பொதுவாக 70 சதவீதம் டிஎஃப்எம் அல்லது பாமாயில் இருக்கும், என்கிறார் டாக்டர் முக்தா சச்தேவ் (HOD, dermatology, Manipal Hospital and medical director, MS Skin Centre)

இருப்பினும், ஒரு சோப்பிலிருந்து நாம் எதிர்பார்க்கும் நுரை மற்றும் சுத்திகரிப்பு பண்புகளை உருவாக்க உண்மையில் 25 சதவீதத்திற்கும் குறைவான எண்ணெய் தேவை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மீதமுள்ளவை வெறுமனே நீரில் கழுவப்படுவதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

Soap bar

சர்பாக்டான்ட் மற்றும் டிடர்ஜென்ட் இதழில் சமீபத்திய கட்டுரை உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், டிஎஃப்எம் ஒரு சோப்பு செயல்பாட்டு செயல்திறனை நேரடியாக பாதிக்காது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

உண்மையில், TFM இல் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டாலும், குளியல் சோப் இன்னும் அதே சுத்திகரிப்பு மற்றும் சுகாதார நன்மைகளை வழங்க முடியும், என்று டாக்டர் சச்தேவ் கூறினார்.

குறைந்த TFM குளியல் சோப், பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை 35-40 சதவிகிதம் குறைக்கும் திறன் கொண்டவை, உயர் TFM சோப்புடன் ஒப்பிடுகையில், அவை தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் கிரகத்திற்கான நிலையான தேர்வாக அமைகின்றன..

குறைந்த TFM குளியல் சோப் உண்மையில் உயர்ந்த மதிப்பு, ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகளை வழங்க முடியும்.

இந்த சோப், சருமத்தின் இயற்கையான தடையை வலுப்படுத்தக்கூடிய, சருமத்திற்கு நன்மை பயக்கும் பொருட்களை இணைத்து, அவற்றை ஒரு நிலையான மற்றும் சருமத்திற்கு ஏற்ற தேர்வாக மாற்றுகிறது.

குறைந்த TFM க்ளென்சிங் பார், தாவர அடிப்படையிலான பொருட்கள் மற்றும் பிற நிலையான பொருட்களுடன் வடிவமைக்கப்படலாம், இது மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் பார்வையில் இருந்து விருப்பமான தேர்வாக இருக்கும் என்று டாக்டர் சச்தேவ் கூறினார்.

சோப்பின் பின்புறத்தில் உள்ள லேபிளை சரிபார்ப்பது உங்கள் சோப்பில் இருக்கும் TFM அளவைக் கண்டறிய உதவும்.

 TFM நிலைகளை நன்கு புரிந்து கொள்ள, உங்கள் சருமத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சிறந்த தரமான சோப்பைத் தேர்ந்தெடுப்பதில் நிபுணர்களின் வழிகாட்டுதலுக்காக உங்கள் மருத்துவர்களை அணுகவும், என்று டாக்டர் கபூர் கூறினார்.

Read in English: Find out what ‘TFM’ in your soap means

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment