தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த ஜி.பி.முத்து டிக் டாக் மூலம் பிரபலமானார். கொரோனா லாக் டவுனில் அவரது யூடியூப் வீடியோக்கள், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அவர் வசைபாடுவதே கேட்கவே ஏராளமான ரசிகர்கள் அவரது வீடியோவை பார்க்க ஆரம்பித்தனர். அவருக்கு கட்டுக்கட்டாக கடிதங்களை எழுதி அனுப்பினர்.
அதன் அடுத்த கட்டமாக ஜிபி முத்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் அமோக ஆதரவை தெரிவித்தனர். ஆனால் முத்து பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இப்போது ஜி.பி.முத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு பால் காய்ச்சும் போது எந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீட்டில் 2 பெட்ரூம், ஒரு ஹால், ஒரு கிச்சன் உள்ளது. அந்த வீடியோ இதோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“