இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர் பிரியா சரவணன். இவர் தனது கணவருடன் பல்வேறு காணொலிகளை பகிர்ந்துள்ளார்.
அந்தக் காணொலிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் பிரியா சரவணன், தனியார் வலையொளி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரின் வீட்டில் உள்ள 1500க்கும் மேற்பட்ட சேலைகளை எடுத்து காண்பித்தார். தனது கல்யாண புடவையை மிகவும் பத்திரமாக வைத்துள்ளார்.
அவரின் விருப்பத்திற்குரிய கறுப்பு புடவையின் விலை ரூ.250தானாம். இதனை அவர் ஆன்லைனில் வாங்கினார். இந்தச் சேலையின் விலையை பலரும் தன்னிடம் கேட்டு தெரிந்துக்கொண்டனர் என பிரியா தெரிவித்தார்.
மேலும் தனது வீட்டில் உள்ள சேலைகளை தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து உதவுவதாக கூறும் பிரியா, சில சென்டிமெண்ட் சேலைகளை மட்டும் யாருக்கும் கொடுப்பதில்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது மகன், அம்மா நீங்கள் மட்டும் ரொம்ப வித்தியாசமாக இருப்பதாக கூறியதாகவும் இதுதான் நான் எனவும் பிரியா கூறினார்.
பிரியா வீட்டில் சேலைகள் மட்டுமின்றி விதவிதமான ஆபரணங்களும் சேகரித்து வைத்துள்ளார். தனது திருமணத்தின் போது கணவர் கட்டிய மஞ்சள் தாலி முதல் அனைத்தையும் பாதுகாத்து வருகிறார்.
மேலும் தாங்கள் மூன்று தாலி கட்டுவதாகவும் அவர் கூறினார். பிரியாவின் வீடியோ ரசிகர்களை கவர்ந்துவருகிறது.
நன்றி : BehindwoodsTV
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/