கருமை நீங்கி சருமம் பொலிவாகும்… 3 நாட்கள் இந்த பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!
சந்தையில் கிடைக்கும் பலவிதமான கிரீம்கள், மாய்ஸ்சரைசர்கள், சன்ஸ்கிரீன்கள் மற்றும் சீரம்களைத் தாண்டி, வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தி சிறந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்கலாம்.
சந்தையில் கிடைக்கும் பலவிதமான கிரீம்கள், மாய்ஸ்சரைசர்கள், சன்ஸ்கிரீன்கள் மற்றும் சீரம்களைத் தாண்டி, வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தி சிறந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், இளம் வயதினரிடம்கூட சருமச் சுருக்கங்கள், மங்கு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. "என் சருமம் பொலிவிழந்து, சுருக்கமாக தெரிகிறது" என்று 50-60 வயதைக் கடந்தவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். வயது அதிகரிப்பதால் ஏற்படும் செல்கள் தேய்மானம், தலைமுடி நரைப்பது போன்றவை இயற்கையான மாற்றங்கள். ஆனால், உணவு முறைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, வறண்ட அல்லது எண்ணெய் பசை சருமம், மற்றும் வெயிலில் அதிகம் வெளியில் செல்லும் நபர்களுக்கு சருமப் பிரச்சனைகள் அதிகமாகின்றன.
Advertisment
உங்கள் சருமத்தைப் பொலிவுறவும், மிருதுவாகவும், ஒரே நிறத்துடனும் வைத்திருக்க உதவும் எளிய, செலவில்லாத, இயற்கையான குறிப்புகள் மற்றும் மூலிகைப் பயன்பாடுகள் பற்றி விரிவாகக் காண்போம். முகத்திற்கு மட்டுமல்ல, உடல் முழுவதும் உள்ள சருமத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை இந்த வீடியோவில் எடுத்துரைக்கிறார் டாக்டர் நித்யா.
சந்தையில் கிடைக்கும் பலவிதமான கிரீம்கள், மாய்ஸ்சரைசர்கள், சன்ஸ்கிரீன்கள் மற்றும் சீரம்களைத் தாண்டி, வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தி சிறந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்கலாம். இது சருமத்தைப் பொலிவாக்கி, சிறிய கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களைப் போக்கி, ஒரே நிற சருமத்தைப் பெற உதவும்.
இந்த ஐந்து பொடிகளையும் சம அளவில் எடுத்து நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையிலிருந்து அரை ஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிதளவு தயிர் அல்லது பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று துளிகள் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவையை முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போலவும், கழுத்து போன்ற கருமை நிறம் உள்ள இடங்களில் தடவி வரவும்.
தினமும் தொடர்ந்து இதைச் செய்யும்போது, மூன்று நாட்களிலேயே உங்கள் சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறுவதை உணரலாம். மங்கலான சருமம் மாறி, பிரகாசமாகத் தோன்றும். சிறிய கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மறைந்து, சருமம் ஒரே சீரான நிறத்தைப் பெறும்.