இட்லி அனைவருக்கும் பிடித்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். ஆனால் இட்லி சாஃப்ட் ஆக இருந்தால் தான் எல்லோருக்கும் சாப்பிட பிடிக்கும். கல்லு போல் இருந்தால் பிடிக்காது.
இட்லி சாஃப்ட் ஆக இருக்க அரிசி மற்றும் உளுந்தின் கலவையும், அரைக்கும் பதமும் முக்கியம். எனவே பந்து போல சாஃப்ட் ஆன இட்லிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை 8 கப் அளவிற்கு எடுத்து ஊற வைக்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் அதே கப்பில் ஒரு கப் உளுந்து எடுத்து ஊறவைக்க வேண்டும். அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் 2 டீஸ்பூன் வெந்தயம் எடுத்து சுடு தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய பின்னர் வெந்தயத்தை தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து உளுந்தில் உள்ள தண்ணீரை வடிக்கட்டிய பின்னர், மிக்சி ஜாரில் உளுந்தைப் போட்டு, ஊற வைத்த தண்ணீரை தேவையான அளவு ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அரைத்த உளுந்தை வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அரிசியை தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை அரைத்து வைத்த உளுந்துடன் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இதனை சில மணி நேரங்கள் புளிக்க வைத்தால், பந்து போன்ற இட்லிக்கு தேவையான மாவு ரெடி. அவ்வளவு நல்ல சட்னி, சாம்பாருடன் 7-8 இட்லிகளை உள்ளே தள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“