சாஃப்ட் இட்லி: துணியில் ஒட்டாமல் எடுக்க இவற்றைச் சேருங்க!

சாஃப்ட்டான இட்லி, துணியில் ஒட்டாமல் லாவகமாக வருவதற்கு இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி சூப்பரான சுவையான இட்லியை சாப்பிடுங்கள்.

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனிச் சிறப்பான இடம் உண்டு. பல லட்சம் பேர் இட்லியை காலை மாலை டிஃப்பனாக சாப்பிடுகின்றனர். இட்லி, சட்னி, சாம்பாரா என்று சலித்துக்கொள்பவர்கள் உன்மையில் சாஃப்டான மல்லிப்பூ போன்ற இட்லியையும் அதற்கேற்ற வகையான சுவையான சட்னி, சாம்பாரை சாப்பிட்டு அறியாதவர்கள்தான் அப்படிக் கூற முடியும். சுவையான இட்லியை சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு இட்லியை சாஃப்ட்டாக மல்லிப்பூ போல, பஞ்சு போல செய்ய வேண்டும். துணி போடு இட்லியை வேக வைத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்

சாஃப்ட்டான இட்லி துணியில் ஒட்டாமல் எடுப்பதற்கு சில விஷயங்களை தெரிந்துகொண்டு செய்தால் போதும். பொதுவாக இட்லி அவிக்கும் தட்டில் துணி போட்டு செய்யாதவர்கள் வெறும் குழியில் லேசாக எண்ணெய் தடவிய பின் மாவு ஊற்றி இட்லியை அவிக்கும்போது தட்டில் இட்லி ஒட்டாமல் சாஃப்ட்டாக வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால், ஆனால், துணியைப் பயன்படுத்தி செய்யும் இட்லி அளவுக்கு மெண்மையாக வருவதில்லை. அதனால், இட்லி தட்டில் துணி போட்டு அவிக்கும்போது எப்படி இட்லியை ஒட்டாமல் எடுக்க வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இட்லி மல்லிப்பூ போல மென்மையாக வருவதற்கு இட்லி தட்டில் போடுவதற்கு அனைவரும் கட்டாயம் காட்டன் துணியை பயன்படுத்த வேண்டும். இட்லி ஊற்றுவதற்கு என்று தனியாக ஒரு காட்டன் துணியை வைத்திருக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கொடுக்கப்ப்படும் வேஷ்டியை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், அந்த துணி லேசாக பாலியஸ்டர் கலந்தது. பியூர் காட்டன் துணியை பயன்படுத்தினால், இட்லி ஒட்டாமல் சாஃப்ட்டாக வரும்.

அடுத்தது, இட்லி அவிக்க பயன்படுத்தப்படும் இட்லி துணியை கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது, அலசி வெயிலில் உலர்த்தி எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யும்போது, இட்லி துணியில் இருக்கும் நுண்கிருமிகள் அழிந்துவிடும்.

இட்லி அவிக்கும்போது ஒவ்வொரு முறையும் இட்லி ஊற்றும்போது, இட்லி துணியை சூடான தண்ணீரில் ஒரு முறை நனைத்து எடுத்த பிறகு பயன்படுத்தலாம்.

இட்லிக்கு ஊற்றும் மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கி விட்டு பின்னர் இட்லி தட்டில் அவிய விட்டு எடுத்தால் இட்லி ஒட்டாமல் சாஃப்ட்டாக வரும்.

இட்லி பஞ்சு போல வருவதற்கு, இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைக்க வேண்டும். அப்படி செய்தால், இட்லி பஞ்சு போல மிருதுவாகவும் இட்லி துணியில் ஒட்டாமலும் வரும்.

இட்லி வெந்த பிறகு, தட்டில் இருந்து இட்லியை எடுப்பதற்கு முன்னர், சிறிதளவு சுத்தமான தண்ணீரை இட்லி மேல் தெளித்துவிட்டு எடுத்தால் இட்லி ஒட்டாமல் சாஃப்ட்டாக வரும்.

அதற்கு எல்லாம் நேரம் இல்லை, உடனடியாக இட்லியை எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், குழாயில் தண்ணீரைத் திறந்துவிட்டு, இட்லி தட்டை பின்புறமாக திருப்பி காட்ட வேண்டும். அதற்கு பிறகு, இட்லியை எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் அழகாக வரும்.

இவை மட்டுமில்லாமல், துணியில் இட்லி ஒட்டாமல் வர வேண்டும் என்றால், இட்லிக்கு மாவு அரைக்கும்போது அவற்றில் நாம் சேர்க்கும் பொருட்களும் துணியில் இட்லி ஒட்டாமல் வருவதற்கு காரணமாக அமையும்.

இதையெல்லாம்விட, பலருக்கும் பஞ்சுப்போல மெத்தென்ற குஷ்பு இட்லி எப்படி செய்வது என்ற கேள்வி இருக்கலாம். அதற்கு, நாலு பங்கு இட்லி அரிசிக்கு, ஒரு பங்கு உளுந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசி, ஒரு டீஸ்பூன் வெள்ளை அவல் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் இட்லி குஷ்பு கும்முனு வரும். அதே நேரத்தில், இது போன்ற பதத்தில் இட்லியை அவிக்கும்போது இட்லி துணியில் ஒட்டாமலும் வரும்.

இது எல்லாவற்றையும் விட இட்லி அவிக்கும் நேரம் என்பது மிகவும் முக்கியமானது. பத்து நிமிடத்திற்கு மேல் இட்லியை அவிக்க வேண்டிய அவசியமில்லை. சரியாக பத்து நிமிடத்தில் இட்லி அவிந்து விட வேண்டும். இதுதான் இட்லி அவிப்பதற்கான சரியான நேரம்.

எனவே, சாஃப்ட்டான இட்லி, துணியில் ஒட்டாமல் லாவகமாக வருவதற்கு இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி சூப்பரான சுவையான இட்லியை சாப்பிடுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Soft idli tips how to make soft idli with out sitck in cloth

Next Story
குழந்தைகளை கொரோனா பாதித்தால் மறக்காமல் இதைச் செய்யுங்க: நிபுணர் டிப்ஸ்Advisory for Covid-positive kids, some home guidelines, கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளுக்கான ஆலோசனை, வீடுகளுக்கு சில வழிகாட்டுதல்கள், கொரோனா வைரஸ், கோவிட் 19, வழிகாட்டுதல்கள், coronavirus, covid 19, health tips, covid care for children, covid home guidelines
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com