சமையலறையில் நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை எந்த உணவு செய்ய எவ்வளவு அளவுக்கு தேவையான பொருட்களை சேர்க்க வேண்டும் என்பது தான். உதாரணத்துக்கு உப்பு-காரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பது தெரியாமல் தவித்திருப்போம்.
சப்பாத்தி கடைகளில் வாங்கிச் சாப்பிடும்போது மிக மிருதுவாக இருக்கும். ஆனால், வீட்டில் கோதுமை மாவு வாங்கி அதை செய்யும்போது நமக்கு சரியாக வராது. கடினமானதாக இருக்கும். பெரியவர்கள் சாப்பிட மிகவும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல் ஈஸியாக சமைக்க சில சமையலறை டிப்ஸ்களை நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.
1. சப்பாத்தி மெருதுவாக வர டிப்ஸ்
சப்பாத்தி ஏன் மெருதுவாக இல்லை? இந்தக் கேள்விக்கு பதில், மாவின் தன்மை மென்மையாக இல்லை. சப்பாத்தி மென்மையாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், மாவை வெதுவெதுப்பான நீரில் பிசையவும்.
மாவை பிசைந்த பிறகு விரல் பரிசோதனையும் செய்யலாம். ஒரு விரலால் மாவை சிறிது குத்துங்கள். அது மென்மையாக இருந்தால், நீங்கள் சப்பாத்தியை இட்டு சுட்டு எடுக்கலாம்.
சமைப்பதற்கு முன் குறைந்தது 15 நிமிடங்களுக்கு பிசைந்த மாவை அப்படியே வைத்துவிடவும்.
கடையில் வாங்கிய கிரீம் பயன்படுத்தாமல் கிரீமி கிரேவிகளை எப்படி செய்வது
கிரேவியை சப்பாத்தி, பராத்தா, பூரி ஆகியவற்றுக்கு கிரேவியை தொட்டு சாப்பிட பயன்படுத்தி வருகிறோம். கடையில் வாங்கிய கிரீம் பயன்படுத்தாமல் இந்த கிரேவியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
அதாவது, கடையில் கிரீம் வாங்குவதற்கு பதிலாக பால், மலாய் அல்லது முந்திரி விழுதைப் பயன்படுத்தலாம். கிரேவியின் சுவையை மேலும் சுவையானதாக மாற்றலாம்.
கொண்டைக்கடலையை வேக வைப்பது எப்படி?
கொண்டைகடலையை முதல் நாள் இரவில் ஊற வைக்க மறந்துவிட்டால் கவலை படாதீர்கள். உங்களுக்கு ஒரு டிப்ஸ் காத்திருக்கிறது.
அது என்னவென்றால், நன்கு கொதித்த சுடு தண்ணீரில் கொண்டைக்கடலையை ஒரு மணி நேரம் போட்டு வைத்திருந்தால் எளிதாக வேக வைத்து சுண்டல் செய்யலாம்.
காய்கறிகளில் உப்பு அதிகரித்துவிட்டால் என்ன செய்வது
நீங்கள் சமையலுக்கு புதுசு என்றால் சரியான அளவு தெரியாமல் உப்பை அதிகளவு சேர்த்துவிட வாய்ப்புள்ளது. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று கூறினாலும் உப்பு அதிகரித்துவிட்டாலும் அதை சாப்பிட முடியாது.
உப்பு அதிகரித்த காய்கறிகளில் கொஞ்சம் பால் அல்லது மலாய் சேர்த்தால் உப்பின் தாக்கம் குறைந்துவிடும்.
பூண்டு தோலை உரிக்க கஷ்டமா இருக்கா?
நாம் செய்யும் டிஷ்களில் பூண்டை சேர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால், இந்த பூண்டை உரிப்பது மிகவும் கடினமான காரியமாகும். இதற்கு எளிதாக ஒரு வழி இருக்கிறது.
இதையும் படியுங்கள்: காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர்… சுகர் பேஷன்ட்ஸ் இதை ட்ரை பண்ணுங்க!
உரிக்க வேண்டிய பூண்டை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதை மூடி நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், எடுத்து உரிக்கத் தொடங்கினால் ஈஸியாக உரித்துவிடலாம். நீங்கள் பூண்டை பேஸ்ட் செய்து வைத்தும் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.