sola poori recipe sola poori tamil : சோளா பூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். சென்னா மசாலா உடன் சோளா பூரியை சப்பிட்டால் வரும் ருசிக்கு ஈடு இணையே இல்ல போங்க. எதுக்கு ரெஸ்டாராண்டு போய்கிட்டு வீட்லயே செஞ்சி கொடுத்தா எவ்ளோ ஆரோக்கியமா இருக்கும் பாருங்க. அதிலும் குழந்தைகளுக்கு நல்லதும் கூட.
Advertisment
மைதா
தயிர் - 2 ஸ்பூன்
ஆப்பசோடா - ஒரு பின்ஞ்
Advertisment
Advertisements
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், ஆப்பசோடா, தயிர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.
தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.
சுவையான சோளா பூரி தயார்.
இதற்கு தொட்டு கொள்ள சென்னா மசாலா சூப்பராக இருக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”