சுவை, ஆரோக்கியமான சோள தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோளம் – கால் கிலோ
உளுத்தம் பருப்பு – 1 கப்
வெந்தயம் – கால் டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
சோளத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்தையும் சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்க வேண்டும். வழக்கமாக அரைப்பது போல் உளுந்தை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து சோளத்தை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். அரைத்த உளுந்து மாவுடன் சோள மாவைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் வரை புளிக்கவிட வேண்டும். மறுநாள் மாவு புளித்து தயாராக இருக்கும்.
இப்போது வழக்கம் போல் தோசை ஊற்றலாம். சுவையான சத்தான சோளதோசை தயார். சோளம் சிறுதானியம் என்பதால் இதில் சத்துகள் நிறைந்துள்ளது. காலை டிபனுக்கு சாப்பிட நன்கு உகந்தது ஆரோக்கியமானதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“