/indian-express-tamil/media/media_files/2025/05/06/j5SXoLjO8CtkGt5N54L4.jpg)
Solar AC
கோடை வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை என்கிறீர்களா? உங்கள் வீட்டு ஏசி பில் எகிறுகிறதா? கவலை வேண்டாம்! இதோ உங்களுக்கான சூப்பர் சாய்ஸ் - சோலார் ஏசி!
வழக்கமான ஏசிகள் பவர்ஃபுல்லாக இருந்தாலும், பில் போடும்போது பல்பு கொடுத்துடுமே! அதுமட்டுமில்லாம, அதை மெயின்டெயின் பண்றதும் பெரிய வேலை. ஆனா, நம்ம சோலார் ஏசி ஏசி இருக்கே, அது வேற லெவல்! சூரியனோட வெளிச்சத்தை அப்படியே எனர்ஜியா மாத்தி, உங்க வீட்டுக்குக் கூலிங் தரும். அதனால கரண்ட் பில் பத்தி யோசிக்கவே தேவையில்லை!
சும்மா கூலிங் மட்டும் இல்லீங்க, இதுல இன்னும் நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கு. சாதாரண ஏசினா கரண்ட் இருந்தா தான் ஓடும். ஆனா இந்த சோலார் ஏசியை சூரிய வெளிச்சம் மூலமாவும், சோலார் பேட்டரி மூலமாவும் யூஸ் பண்ணலாம். உங்க வீட்டு மொட்டை மாடியில சில சோலார் பேனல்களைப் போட்டுட்டா போதும்.
பகல்ல சூரியன் பளபளன்னு மின்சாரம் கொடுக்கும்போது, இந்த பேனல்கள் எனர்ஜியை சேமிச்சு வெச்சிடும். அந்த எனர்ஜியை வெச்சு ராத்திரியானாலும் உங்க ஏசியை ஜில்லுன்னு ஓட விடலாம்.
உண்மைதான், இந்த சோலார் ஏசி ஏசியோட ஆரம்ப விலை கொஞ்சம் அதிகமா இருக்கலாம். ஆனா யோசிச்சுப் பாருங்க, ஒரு தடவை போட்டா அப்புறம் உங்க மின்சாரக் கட்டணம் சுத்தமா இல்லாம போயிடும்! வருஷம் பூரா போடுற கரண்ட் பில்ல நினைச்சுப் பார்த்தா, இது எவ்வளவோ பெட்டர் இல்லையா?
இந்த ஏசியை உங்க வீட்டுல பொருத்துறதுனால நிறைய நல்லது நடக்கும். மெயின் பாயிண்டே என்னன்னா, இது கரண்ட்டே யூஸ் பண்ணாது! அதனால உங்க பர்ஸ் எப்பவும் கனமா இருக்கும்.
அதுமட்டுமில்லாம, நீங்க டெய்லி யூஸ் பண்ற ஆட்டோ ஸ்டார்ட் மோட், டர்போ கூல் மோட், ட்ரை மோட், ஸ்லீப் மோட், டைமர் வெச்சு ஆன்-ஆஃப் பண்றது, தானா சுத்தம் பண்றது, ஸ்பீட கண்ட்ரோல் பண்றது, காத்து எந்தப்பக்கம் போகணும்னு அட்ஜஸ்ட் பண்றது, லைட் ஆஃப் பண்றதுன்னு எல்லா ஆப்ஷனும் இதுலயும் இருக்கு! சோ, கூலிங்கும் வேணும், காசும் மிச்சமாகணும்னா, சூரிய ஒளி ஏசி தான் பெஸ்ட் சாய்ஸ்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.