பட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி!

திருமணத்திற்குப் பிறகும் பாப்பையா இலக்கியப் பணிகளை தொய்வின்றி தொடர முடிந்தது.

திருமணத்திற்குப் பிறகும் பாப்பையா இலக்கியப் பணிகளை தொய்வின்றி தொடர முடிந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
solomon pappaiah age solomon pappaiah pattimandram

solomon pappaiah age solomon pappaiah pattimandram

solomon pappaiah age solomon pappaiah pattimandram : சாலமன் பாப்பையா மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் ஆவார். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர்.

Advertisment

சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கல்லூரிப் பேராசியர், தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் என்று பன்முகம் கொண்டவர் சாலமன் பாப்பையா. இவர் நடுவராகப் பங்கேற்கிற பட்டிமன்றங்கள்வந்த பிறகுதான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் பட்டிமன்றங்கள் செல்லத் தொடங்கின. வள்ளுவன் தந்த குறளுக்கு நகைச்சுவை கலந்து இவர் தரும்விளக்கவுரை தமிழர்களை சிரிக்க, சிந்திக்க வைத்தது மட்டுமல்லாமல் குறளின் பெருமையை உணரவும் வைத்திருக்கிறது.

இவருக்கு தற்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து சிறப்பித்துள்ளது. இந்த விருது அவருக்கும் பெருமை அவர் வாழ்ந்த இந்த தலைமுறையில் அவரோடு சேர்ந்து பயணித்து நமக்கும் பெருமை.

Advertisment
Advertisements

படிப்பு முடிந்த பிறகு சிறு சிறு இலக்கியக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். அப்போது அமெரிக்கன் கல்லூரியில் பேராசியராக பணிபுரிந்து கொண்டிருந்ததால் நல்ல இடத்தில் பெண் பார்த்தார்கள். அப்படிக் கிடைத்தவர்தான் அவர் மனைவி ஜெயபாய். அப்போது ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லவில்லை. வீட்டுப் பொறுப்புகளை முழுக்க முழுக்க அவரே கவனித்துக் கொண்டார். இதனால் திருமணத்திற்குப் பிறகும் பாப்பையா இலக்கியப் பணிகளை தொய்வின்றி தொடர முடிந்தது.

தொடர்ந்து அரசிய-ல் வந்த பகுத்தறிவு இயக்கங்கள், புராண இதிகாசங்களைப் பற்றி கேலி-யாகவும் கிண்டலாகவும் பேசத் தொடங்கினார்.இப்படி படிப்படியாக தன்னை தமிழுடன் வளர்த்துக் கொண்டவர். ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து கலக்கி இருக்கிறார்.

இன்று வரை சண்டியிவில் எந்த ஒரு சிறப்பு நாள் நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ஒளிப்பரப்படாமல் இருந்ததே இல்லை. வீ ஆல்வேஸ் லவ்யூ பாப்பையா சார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: