வீட்டில் பூச்சிகளின் தொல்லை மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். குறிப்பாக, கிட்சனில் சிறிய வகையிலான பூச்சிகள் நிறைய காணப்படும். இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என தற்போது காணலாம்.
முதலில், ஒரு பழைய பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கத்தியைக் கொண்டு பாதிகாக வெட்ட வேண்டும். இதற்குள் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் துண்டுகளாக வெட்டிய பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதையடுத்து, பாட்டிலின் மீது பாலித்தீன் கவர் போட்டு சுற்றி, அந்த கவரின் மேற்புறத்தில் சிறிய துவாரங்கள் இட வேண்டும்.
இந்த பாட்டிலை பூச்சிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் வைத்து விடலாம். இதன் மூலம் பூச்சிகள் உணவு பொருள்களுக்கு வருவதை நம்மால் தடுக்க முடியும்.
இந்த பூச்சிகளை விரட்டுவதற்கு மற்றொரு டிப்ஸையும் பின்பற்றலாம். ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி, அதன் மீது சில கிராம்புகளை குத்தி வைக்க வேண்டும். பின்னர் இந்த எலுமிச்சையை, பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்கும் இடத்தில் வைத்து விடலாம். எலுமிச்சை மற்றும் கிராம்பின் மனம் பூச்சியை தடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“