தமிழில் வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் வெளியான தமிழில் அறிமுகமான நடிகை சோனாலி பிந்த்ரே, சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த பதிவில் சில நேரங்களில் வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. ஆனால் என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.எனக்கு புற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெற அமெரிக்காவிற்கு வந்துள்ளேன்” என்று கூறி இருந்தார்.
40 வயதாகும் சோனாலிக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.கணவர் மற்றும் மகனுடன் அன்பாக வாழ்ந்துக் கொண்டிருந்த சோனாலிக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டதைக் கண்டு சினிமா பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அவருக்கு ஆதரவாகவும், விரைவில் சோனாலி உடல் நலம் தேறி இந்தியா திரும்பவும் நடிகர், நடிகைகள், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதன் பின்பு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சோனாலி சிகிச்சைகாக தனது முடிகளை நீக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்நிலையில் தனக்கு புற்றுநோய் இருப்பது குறித்து சோனாலின் முதன் முறையாக தனது மகனிடம் சொல்லிய சம்பவத்தை மிகவும் நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
இதுக்குறித்து சோனாலி பகிர்ந்திருப்பது, “ முதலில் இதை பற்றி என் மகனிடம் எப்படி சொல்வது என்று பல நாட்கள் நானும் என் கணவரும் சிந்தித்தோம். இந்த சிறுவயதில் அவனால் இதை எப்படி பக்குவமாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று எங்களுக்கு தெரியவில்லை. தனது தாயிக்கு இப்படி ஒரு வேதனை ஏற்பட்டுள்ளது என்பதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியவில்லை. இருந்தாலும் கட்டாயம் இஅதைப்பற்றி அவனிடம் சொல்ல வேண்ட்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்.
A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on
ஆனால் என்னால் உண்மையில் நம்ப முடியவில்லை. அவனால் எப்படி இதை இவ்வளவு பக்குவமாக எடுத்துக் கொள்ள முடிந்தது என்று எங்களால் நம்பமுடியவில்லை. இப்போது அவன் தான் எனக்கு ஒரு தாயாக இருந்து வருகிறான். எடுத்து அன்போடு அக்கறையுடன் கவனித்தும் கொள்கிறான்.
இதுபோன்ற விஷயங்களை பிள்ளைகளிடம் பகிர்வது மிக அவசியம் என நான் கருதுகிறேன். நாம் நினைப்பதை விட அவர்கள் மனதளவில் திடமானவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் என்று சொல்லி அவர்களை தனிமை படுத்துவதை விட அவர்களையும் நம்மில் ஒருவராக சேர்த்துக் கொண்டு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது மிக அவசியம். வலியிலிருந்து பிள்ளைகளை காக்கின்றோம் என்ற பெயரில் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரியவைக்காமல் பல நேரங்களில் நாம் தவறிழைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.