Advertisment

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கில் பக்தர்கள்; முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanda train

திருச்செந்தூர் முருகன் கோயில் உலகப் புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர். அதிலும் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகை தருவர். பல்வேறு ஊர்களில் இருந்து விரதம் இருந்து திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்வர். 

Advertisment

அந்த வகையில் இந்தாண்டு கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு இன்று (நவ.7) நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. 

தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 7-ஆம் தேதி இரவு திருச்செந்தூரிலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல்,திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

மேலும், திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. 

திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06732) திருச்செந்தூரிலிருந்து நவம்பர் 7 அன்று இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06731) திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 7 அன்று இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு நவம்பர் 8 அன்று நள்ளிரவு 12.10 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்க நல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில்  நின்று செல்லும். இந்த ரயில்களில் 9 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment