South Indian Actors and Actresses : காதல் தோல்வி இன்றைய அவசர உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை. மனங்கள் ஒத்துபோய் தான் காதலர்கள் ஆகிறார்கள். பழகிய பின்பு பல்வேறு காரணங்களால் அவர்களின் உண்மையான குணங்கள் அறியப்பட்டு சிலர் இதுக்கு லைஃப்க்கு செட் ஆகாது என்று பிரிந்து விடுகிறார்கள்.
இது மற்றவர்களுக்கு மட்டுமில்லை சினிமா துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.ஆனால் அவர்களின் காதல் தோல்விகள் சற்று அதிகமாகவே பேசப்படும். காரணம் அவர்கள் பிரபலங்கள் என்பதால் தான். ஆனால் அதையெல்லாம் அவர்கள் பெரியதாக எடுத்துக் கொண்டால் அவர்களின் அடுத்த வேலைகளை பார்க்க முடியாது. ஈஸியாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து விடுவார்கள். அப்படி, இன்று உச்சத்தில் இருக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர்கள், மாஜி நட்புகள் பற்றி சின்னதாக ஒரு ரீவைண்ட் பார்ப்போமா?
1. நயன்தாரா:
சினிமாவில் மிகப் பெரிய வெற்றி கொடியை நாட்டிய இவருக்கு இரண்டு காதல்களும் தோல்வியில் முடிந்தது. முதலில் சிம்பு - நயன் ஜோடி தான் அதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பின்பு, சில பல காரணங்களால் இவர்கள் பிரிந்தனர். பின்பு நயன் நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகங்களுக்கு சொந்தக் காரரான பிரபு தேவாவை காதலித்தார். பல நிகழ்ச்சிகளிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்துக் கொண்டனர். பின்பு, இவர்களின் காதலும் தோல்வியில் முடிந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-65.jpg)
2. சமந்தா:
இன்று சமந்தா இருக்கும் ரேண்ட்சே வெற. தெலுங்கு, தமிழ் என கல்யாணத்திற்கு பிறகும் கலக்கிக் கொண்டிருக்கிறார். க்யூட் சமந்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வேற. ஆனால் சமந்தா ஆரம்பத்தில் நடிகர் சித்தார்த்துடன் உடன் டேட்டிங்கில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியது. பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது நிகழ்ச்சியில் இருவரும் ஒரே நிற ஆட்டையில் கலந்துக் கொண்டனர். ஆனால் திடீரென்று பிரேக் அப் ஆனது இவர்களின் நட்பு பேச்சு அனைத்தும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-63.jpg)
3. த்ரிஷா:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-64.jpg)
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்து இன்னும், ரசிகர்களால் அதிகம் ரசிகப்படும் நடிகை த்ரிஷாவின் காதல் ப்ளஸ் திருமணம் இரண்டுமே தடைப்பட்டது. முதலில் த்ரிஷா பாகுபலி புகழ் ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் திடீரென்று இருவருக்கும் நடுவில் விரிசல் விழ, த்ரிஷாவுக்கு வருண் மணியன் உடன் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. பின்பு, அந்த திருமணமும் நிறுத்தப்பட்டது. இப்போது த்ரிஷா முரட்டு சிங்கிள்
4. அனுஷ்கா ஷெட்டி:
தெலுங்கில் இருந்து தமிழ் பக்கம் வந்த புயல் தான் அனுஷ்கா. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் - அனுஷ்கா ஜோடி தான் சூப்பர் என பட்டித்தொட்டி எங்கும் பரவியது. ஆனால் இதற்கு முன்பு தெலுங்கில் அனுஷ்கா இயக்குனர் கிருஷ்டன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். சில காலம் இந்த தகவல்கள் காட்டுத்தீ போல் பரவின. அப்புறம் சத்தமே இல்லாமல் அணைந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-66.jpg)
5. பூஜா:
தமிழ் சினிமா அவ்வளவு எளிதாக பூஜாவை மறந்து விடாது. அழகு, நடிப்பு என பூஜாவின் பேச்சுக்கே அவ்வளவு ஃபேன்ஸ். இவரிடம் அடிக்கடி ஆர்யா குறித்து கேள்வி எழுப்படும். இவர்களின் நட்பு கதையெல்லாம் அனைவருக்கும் தெரியும். பிரபல தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பூஜாவை ஆர்யா தூக்கிட்டு வந்த சம்பவம் அந்த ஆண்டு மிகப் பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. ஆனால் இப்போது பூஜாவுக்கு திருமணமாகி அவர் இலங்கையில் வசிக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/imageproxy.jpg)
6. ஹன்சிகா மோத்வானி:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/D5hNaYMWsAc7vNF_20182-13.jpeg)
இவருக்கும் சிம்புவுக்கும் இடையில் என்ன காரணத்தினால் நட்பு முறிந்தது என்பது இப்போது வரை யாருக்கும் தெரியவில்லை.